தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
Published:2 mins agoUpdated:2 mins ago

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்து, ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் இன்று பதவியேற்றிருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதுடன், 9 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.
தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கியிருக்கும் நிலையில் அரசியல் பிரபலங்கள் பலரும் நல்லாட்சி அமைந்திட தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அவர், "தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி - விஜய்
அவரைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "மதிப்பிற்குரிய விஜய் அவர்களுக்கு, ராகுல் காந்தி முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக, ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களையும், அனைவருக்கும் சமமான நீதியையும் வழங்கி, உங்கள் மாநிலத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
.png)






English (US) ·