Washing Machine Cleaning: வாஷிங் மெஷினில் கெட்ட வாடையா? அழுக்கை நீக்கி புதுசு போல ஜொலிக்க 5 எளிய டிப்ஸ்!

1 hour ago 9

Washing Machine: துணிகளைச் சுத்தமாக்க நாம் பயன்படுத்தும் வாஷிங் மெஷினே சில நேரங்களில் அழுக்காகி, துணிகளில் ஒருவித கெட்ட வாடையை ஏற்படுத்தக்கூடும். மெஷினுக்குள் தங்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை நீக்கி, அதன் ஆயுளைக் கூட்ட சிம்பிள் டிப்ஸ் இதோ

15

மவுத்வாஷ் மேஜிக்

Image Credit : Getty

மவுத்வாஷ் மேஜிக்

நமது பற்களைச் சுத்தமாக்கப் பயன்படுத்தும் மவுத்வாஷ், வாஷிங் மெஷினையும் சுத்தமாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? டிடர்ஜென்ட் பாக்ஸில் இரண்டு மூடி மவுத்வாஷை ஊற்றி, 'Quick Wash' மோடு செட்டிங்கில் மெஷினை ஒருமுறை ஓடவிடுங்கள். இது மெஷினுக்குள் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா மற்றும் கிருமிகளை முற்றிலும் அழித்துவிடும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25

ரப்பர் கேஸ்கெட் கறைகளுக்கு முற்றுப்புள்ளி

Image Credit : Getty

ரப்பர் கேஸ்கெட் கறைகளுக்கு முற்றுப்புள்ளி

முக்கியமாக 'Front Load' மெஷின்களில் உள்ள ரப்பர் பகுதியில் அழுக்கும், கருப்பு நிற பூஞ்சையும் அதிகம் சேரும். இதனை நீக்க ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு காட்டன் துணியில் நனைத்து, அந்த ரப்பர் பகுதியை நன்றாகத் துடைக்க வேண்டும். இது விடாப்படியான கறைகளை நொடியில் அகற்றும்.

35

பேக்கிங் சோடா ட்ரீட்மென்ட்

Image Credit : Getty

பேக்கிங் சோடா ட்ரீட்மென்ட்

சோப்புப் பெட்டியில் (Detergent Box) கெட்டியாகப் படிந்திருக்கும் சோப்புத் துகள்களை நீக்க, அதைத் தனியே கழற்றி எடுத்து சுடுதண்ணீரில் சிறிது பேக்கிங் சோடா கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு பழைய டூத் பிரஷ் கொண்டு தேய்த்தால் பெட்டி புதுசு போல ஜொலிக்கும்.

45

ஃபில்டர் பராமரிப்பு

Image Credit : Getty

ஃபில்டர் பராமரிப்பு

மெஷினின் அடிப்பகுதியில் உள்ள ஃபில்டரில் துணிகளில் உள்ள நூல், பொத்தான்கள் மற்றும் நாணயங்கள் சிக்கிக் கொள்ளும். மாதத்திற்கு ஒருமுறை இந்த ஃபில்டரைத் திறந்து சுத்தம் செய்வதன் மூலம் மெஷினின் மோட்டார் பழுதாவதைத் தடுத்து, அதன் உழைப்பு காலத்தை அதிகரிக்கலாம்.

55

ஈரம் காய வழிவிடுங்கள்

Image Credit : Asianet News

ஈரம் காய வழிவிடுங்கள்

துணிகளைத் துவைத்து முடித்தவுடன் மெஷின் கதவை உடனே மூட வேண்டாம். கறைந்தது அரை மணி நேரம் கதவைத் திறந்து வைப்பதன் மூலம் உள்ளே இருக்கும் ஈரப்பதம் காய்ந்து, துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாவதைத் தடுக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read Entire Article