Last Updated:May 16, 2026 9:56 AM IST
Weather Update | தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது.

அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது.
இதனால், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இதேபோன்று, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
குறிப்பாக தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக, மே 20-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?
தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.
மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.
தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.
.png)








English (US) ·