Weather Update | தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை... எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!

1 hour ago 15

Last Updated:May 13, 2026 2:00 PM IST

Weather Update | சென்னை வானிலை மையம், தென்மேற்கு பருவமழை துவக்கம், தமிழகத்தில் 5 நாள் கனமழை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் மழை என எச்சரிக்கை.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் 16ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, இன்று காலை அளவில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், வரும் 15ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

தேனி மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும், அதேபோல், வரும் 17ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Weather Update | தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை... எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் முக்கிய அப்டேட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் அப்டேட்!

  • தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை மற்றும் இடி மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • நீலகிரி, கோயம்புத்தூர், தேனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.

  • தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article