Last Updated:May 11, 2026 11:56 AM IST
White Honey| தேன் வகைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கும் முருங்கைத் தேன் மிகவும் பிரபலமானதாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இந்த தேன் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாக இருப்பதால் மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது.

News18
தேனீ வளர்ப்பு குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரக்கூடிய சிறந்த துணைத் தொழிலாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையை பாதுகாப்பதோடு, விவசாயத்திற்கும் மகசூல் அதிகரிப்பிற்கும் தேனீ வளர்ப்பு முக்கிய பங்காற்றுகிறது.
தேனீப் பெட்டியின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். பெட்டியின் மேல்பகுதியில் மூடி அமைந்திருக்கும். அதன் கீழ் ஐந்து அறைகள் (Frames) இடம் பெற்றிருக்கும். இதில் முதல் பகுதி ‘தேனறை’ என அழைக்கப்படுகிறது. இங்கு தேனீக்கள் சேகரிக்கும் தேன் சேமிக்கப்படுகிறது.
தேனறைக்குக் கீழே ‘புழுவறை’ அமைந்துள்ளது. இந்த பகுதியில் தேனீக்கள் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகின்றன. இதன் மூலம் புதிய வேலைக்கார தேனீக்கள் உருவாகின்றன. பெட்டியின் அடிப்பகுதியில் உள்ள பலகையை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம். ‘மெழுகு அந்துப்பூச்சி’ போன்ற பூச்சிகள் தாக்கும் அபாயம் இருப்பதால், அவ்வப்போது தேங்காய் நார் கொண்டு அடிப்பலகையை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
பொதுவாக தேனீக்கள் தங்கள் பெட்டியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மலர்களிலிருந்து தேனை சேகரித்து மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கே திரும்புகின்றன. மாலை 6 மணியளவில் பெரும்பாலான தேனீக்கள் பெட்டிக்குள் திரும்பிவிடுவது அவற்றின் இயல்பாகும். தேனீப் பெட்டிகளை இடமாற்றம் செய்ய வேண்டிய சூழலில், இரவு நேரமே சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம், அந்த நேரத்தில் அனைத்து தேனீக்களும் பெட்டிக்குள் திரும்பியிருக்கும்.
தேன் வகைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கும் முருங்கைத் தேன் மிகவும் பிரபலமானதாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இந்த தேன் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாக இருப்பதால் மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தவிர, மரங்களில் கிடைக்கும் கொம்புத் தேன், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கிடைக்கும் மலைத் தேன், நாவல் தேன் உள்ளிட்டவையும் முக்கியமான தேன் வகைகளாகும்.
ஒரு குறிப்பிட்ட மலரிலிருந்து 80 சதவீதத்திற்கும் மேல் தேன் சேகரிக்கப்பட்டால், அந்த மலரின் பெயரே அந்த தேனுக்கு வழங்கப்படும். உதாரணமாக, முருங்கை மலர்களிலிருந்து அதிகளவில் பெறப்படும் தேன் ‘முருங்கைத் தேன்’ என அழைக்கப்படுகிறது.
இங்கு பயன்படுத்தப்படும் தேனீப் பெட்டி ‘மார்த்தாண்டம் பெட்டி’ என அழைக்கப்படுகிறது. இதில் இந்தியத் தேனீக்கள் வளர்க்கப்படுகின்றன. இவை நமது காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக உள்ளன.
மொத்தத்தில், தேனீ வளர்ப்பு குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய லாபகரமான தொழிலாக மட்டுமல்லாமல், இயற்கை சமநிலையையும் பாதுகாக்கும் முக்கிய தொழிலாகவும் திகழ்கிறது. இந்தத் தொழிலில் ஆர்வமுள்ளவர்கள் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று தாராளமாக முன்னெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
First Published :
May 11, 2026 11:56 AM IST
White Honey: "2 கி.மீ தூரம் பயணம் செய்யும் தேனீக்கள்" - வெள்ளை நிறத் தேனீக்களின் ஆச்சரியமான உலகம்...
.png)








English (US) ·