Last Updated:Apr 06, 2026 6:44 PM IST
Youth OTT | கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யூத்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கருணாஸ் மகன் கென் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் கடந்த மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘யூத்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் எப்போது, எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் கென் கருணாஸ். தன் அப்பாவின் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து ‘விடுதலை 2’ படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குநராக ட்விஸ்ட் கொடுத்தார் கென்.
கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘யூத்’. பள்ளி பருவ காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் கடந்த மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘யூத்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் கதையை பொறுத்தவரை, பள்ளியில் படிக்கும் கென், காதலியைத் தேடி அலைய, கல்லூரியிலும் அந்தப் பயணம் தொடர்கிறது. அப்போது, மீனாட்சிக்கும் - கென் கருணாஸுக்கும் காதல் ஏற்பட, மீனாட்சி விடுமுறையில் ஊருக்கு சென்றுவிடுகிறார்.
அந்த நேரத்தில் மற்றொரு பெண் கென்னிடம் காதலை சொல்கிறார். இதையும் கென் ஏற்றுக்கொள்கிறார். இந்த விஷயம் மீனாட்சி தெரிந்துகொள்கிறார். உடனே ப்ரக் அப். அதன் பிறகு கென் கருணாஸ் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் ‘யூத்’ திரைப்படம்.
இந்தப் படம் இதுவரை ரூ.60 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம்!
விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டம்.
.png)






English (US) ·