“அதிமுக; பாஜகவுக்கு இலையாக மாறிவிட்டது” – இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின்

12 hours ago 19

Last Updated:Feb 07, 2026 6:10 PM IST

"எங்கள் தலைவர் சொல்வதை போல் என்றுமே தமிழ்நாடு, டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான்" என திமுக இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

News18
News18

“மற்றவர்களைப் போல், வீட்டுக்குள் தூங்கிவிட்டு, மாதத்திற்கு ஒரு முறை வெளியேவந்து, முகத்தை மூடிக்கொண்டு திருட்டுத்தனமாக டெல்லியில் சுற்றும் தலைவர் கிடையாது நமது தலைவர்” என இளைஞர் அணி மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக இளைஞர் அணி, கழகப் பணி மற்றும் மக்கள் பணி என பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. ஆனால், எந்த அமைப்பும், கொள்கையும், லட்சியமும் இல்லாத வெற்று கூச்சலிடும் கூட்டம் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது.

சங்கிகளுக்கு எப்போதும் நம் மீது ஒரு எரிச்சல். இதுவரை தமிழ்நாடு பக்கம் எட்டிப் பார்க்காத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தேர்தல் வருவதும் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார். இனி அடிக்கடி வருவார். கடலுக்கடியில் தியானம் செய்வார்.

தமிழ்நாட்டுக்கு இரட்டை என்ஜின் அரசு வேண்டும் என மோடி சொன்னார். ஆனால், திராவிட மாடல் ஒரு என்ஜின் அரசை வைத்தே, இங்கு இரட்டை இலக்கு அளவில் பொருளாதாரத்தை எட்டிவிட்டோம். வழக்குகளில் இருந்து காப்பாற்றுகிறோம் என அடிமைக் கூட்டத்தை பாசிஸ கூட்டம் தூக்கியிருக்கிறது. இதற்கெல்லாம் அதிமுக அஞ்சும். ஆனால், திமுக என்றைக்கும் அஞ்சாது.

எங்கள் தலைவர் சொல்வதை போல் என்றுமே தமிழ்நாடு, டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலையை படித்து முடிப்பதற்குள் எடப்பாடி பழனிசாமி சிறந்த பட்ஜெட் என சொல்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இந்தியாவிலேயே முரட்டு அடிமை.

இதுவரை அதிமுக, பாஜகவுக்கு கிளையாக இருந்தது. தற்போது அது பாஜகவுக்கு இலையாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் கூட்டணிவைத்தாலும் தமிழ்நாட்டில் நுழையமுடியாது.

நாம் இன்று மக்களை தைரியமாக சந்திக்க தயாராக இருக்கிறோம். மற்றவர்களைப் போல், வீட்டுக்குள் தூங்கிவிட்டு, மாதத்திற்கு ஒரு முறை வெளியேவந்து, முகத்தை மூடிக்கொண்டு திருட்டுத்தனமாக டெல்லியில் சுற்றும் தலைவர் கிடையாது நமது தலைவர்” இவ்வாறு பேசினார்.

Read Entire Article