Last Updated:October 13, 2025 2:03 PM IST
அன்று டீ கடையில் பெரும் சினிமா கனவுகளுடன் வலம் வந்தவர்கள், இன்று கலைமாமணி விருதுடன் அதே போன்ற புகைப்படத்தை ரீ-கிரியேட் செய்துள்ளனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அன்று டீ கடையில் பெரும் சினிமா கனவுகளுடன் வலம் வந்தவர்கள், இன்று கலைமாமணி விருதுடன் அதே போன்ற புகைப்படத்தை ரீ-கிரியேட் செய்துள்ளனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடனத்திலும், நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சாண்டி. அவர் நடிப்பில் வெளியான ‘லியோ’, மலையாளத்தில் வெளியான ‘லோகா சாப்டர் 1’ ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார். அதே சமயம் காலா, விக்ரம், தங்கலான், தக் லைஃப், கூலி ஆகிய படங்களுக்கு கோரியோ கிராஃப் செய்துள்ளார். மறுபுறம் ‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய படங்கள் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் மணிகண்டன்.
வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டனுக்கும், நடன அமைப்பாளர் சாண்டிக்கும் தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்தது. இருவரும் கலைமாமணி விருது பெற்ற கையோடு இன்ஸ்டாவில் பிரண்ட்ஷிப் கோல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
இரண்டு பேரும் டீக்கடையில் ஒன்றாக திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது ஒன்றாக விருது பெற்றது வரை தங்கள் நட்பு தொடர்வதை நினைவுகூர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சாண்டி, “ஒரு கனவின் இரு விதைகளை வெவ்வேறு மண்ணில் விதைத்தோம். இருவரும் ஒரே இடத்திலிருந்து தொடங்கினோம். ஆனால் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுத்தோம். நாங்கள் எங்கள் கனவில் வேரூன்றி நீண்ட தூரம் வந்துவிட்டோம். கலைமாமணி விருதை பகிர்ந்துகொள்ளும் வெளிச்சத்தில் மேடையில் ஒன்றாக நிற்கிறோம்” என எழுதியுள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 2:03 PM IST