Last Updated:October 13, 2025 8:53 AM IST
“என்னால் விக்ரம் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை.ஆனால், அந்தத் தகுதியை அடைய நான் எல்லா வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
“என்னால் விக்ரம் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அவரின் மகனாக இருக்க நான் என்ன தவம் செய்தேன் தெரியவில்லை. ஆனால், அந்தத் தகுதியை அடைய நான் எல்லா வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் வரும் 17-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் துருவ் விக்ரம், “என் அம்மாவுக்கு எப்போதும் என் மீது ஏமாற்றம் இருக்கும்.
சிறுவயதிலிருந்து சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் குறை சொல்வார்கள். அதனால் அவருக்கு என் மீது எப்போதும் பெரிய அளவில் நம்பிக்கை இருந்ததில்லை. ‘பைசன்’ படம் அவர்களை பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என நினைக்கிறேன். படத்தில் கடினமான காட்சிகளில் நான் நடிக்கும்போதெல்லாம் அப்பா விக்ரம் என் மனதில் எப்போதும் இருப்பார்.
அவர் அந்த அளவுக்கு கஷ்டப்படும்போது நம்மால் சிறிய அளவில் கூட முயற்சி பண்ண முடியாதா என யோசிப்பேன். என்னால் விக்ரம் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அவரின் மகனாக இருக்க நான் என்ன தவம் செய்தேன் தெரியவில்லை. ஆனால், அந்தத் தகுதியை அடைய நான் எல்லா வேலைகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். நன்றி அப்பா. இப்படியான ஒரு படத்தைக் கொடுத்த என்னுடைய குரு மாரி செல்வராஜுக்கு நன்றி.
அவருக்காக நான் 10 வருடங்கள் கூட காத்திருப்பேன். நான் கடினமாக உழைத்தேன் என்கிறார்கள். உண்மையில் மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் நடித்திருந்தால் அது இன்னும் வேறு மாதிரி இருந்திருக்கும். அவர் சொல்லும் ‘டேக் ஓகே’-க்காக நான் எப்போதும் ஏங்கிக் கொண்டிருப்பேன். இந்தப்படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜுக்கு நன்றி. என்னை நம்பி பணத்தை முதலீடு செய்த பா.ரஞ்சித்துக்கு நன்றி. எனக்காக கூட இந்தப் படம் வெற்றிபெற வேண்டும் என நினைக்கவில்லை. என் இயக்குநருக்காக இந்தப் படம் வெற்றிபெற வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 13, 2025 8:53 AM IST