கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி தென்கொரியாவில் நடந்த ஏபெக் மாநாட்டில் சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங். - படம்: ராய்ட்டர்ஸ்
ஷென்சன்: அமெரிக்கா விதித்துவந்த வர்த்தகத் தடைகளை நேரடியாக எதிர்ப்பதைத் தவிர்த்து, சீனா அதனுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்குப் புதிய சட்ட விதிமுறைகளை நடைமுறைப் படுத்தி வருகிறது.
அதனால் இருநாடுகளின் சட்ட திட்டங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டு நிறுவனங்கள் தவிக்கின்றன.
எடுத்துக்காட்டாக கடந்த மார்ச் மாதம் ஈரானிடம் எண்ணெய் வாங்கியதற்காக, சீனாவின் ஐந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்கா வழக்கம்போல் தடைகளை விதித்தது.
ஆனால் அதற்கு சீனாவின் பதிலடி வியப்பூட்டியது. அத் தடைகளை எதிர்க்காமல், அந்த நிறுவனங்களிடம் அமெரிக்கா விதித்த தடைகளைப் புறக்கணிக்குமாறு சீன தெரிவித்தது.
சீனா முதன்முறையாக கடந்த 2021ஆம் ஆண்டில் அந்நாட்டில் வகுக்கப்பட்ட ‘சட்டங்களைத் தடுத்தல்’ என்ற நடவடிக்கையை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, சீனாவுக்கு அப்பாற்பட்டு, வெளிநாடுகளில் நியாயமற்ற முறையில் இயற்றப்படும் விதிகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்து முடிவெடுக்கும் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படும் வகையில் அச்சட்டம் வடிமைக்கப்பட்டது.
அடிப்படையில் அமெரிக்காவின் தடைகளை ஏற்றுக்கொள்ளவோ அதன்படி செயல்படவோ தேவையில்லை என்று சீனா அதன் குடிமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசதந்திர முறைப்படி எதிர்க்காமல் தனது உள்நாட்டு விதிமுறைகளைத் தெளிவாக அமலாக்கும் போக்கு என்று ஆய்வாளர்கள் சீனாவின் செயல்பாடு குறித்துக் கருத்துரைத்தனர்.
சீன, அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு
அடுத்த வாரம் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை (மே 14, 15) ஆகிய இருநாள்கள் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் சந்திப்பதற்கு முன் இந்த விவகாரம் நடப்பது கவனத்துக்குரியது. வர்த்தகத் தடைகள் அவர்களின் சந்திப்பில் முக்கிய அங்கம் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.png)






English (US) ·