அம்மாவுக்கு ஸ்மார்ட் பரிசு.. தினசரி பயணத்தை எளிதாக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்

1 hour ago 15

இந்த அன்னையர் தினத்தில், உங்கள் அம்மாவின் தினசரி பயணத்தை எளிதாக்க ஒரு மின்சார ஸ்கூட்டரைப் பரிசளிக்கலாம். இதன் மூலம், உங்கள் அம்மாவுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் வசதியான ஸ்கூட்டரைத் தேர்வுசெய்ய இது உதவும்.

2 Min read

Published : May 10 2026, 03:15 PM IST

15

அம்மாவுக்கு ஏற்ற ஸ்கூட்டர்கள்

Image Credit : our own

அம்மாவுக்கு ஏற்ற ஸ்கூட்டர்கள்

இந்த அன்னையர் தினம் 2026 பொதுவான பரிசுகளுக்கு அப்பால், தினசரி பயணத்தையே எளிதாக்கும் ஒரு சிந்தனையை பரிசாக அளிக்கலாம். மின்சார ஸ்கூட்டர் அதற்கான சரியான தேர்வாக மாறி வருகிறது. பெட்ரோல் செலவு இல்லை, பராமரிப்பு சுலபம், ஓட்டுவது எளிது. இதனால், வீட்டிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் வாகனமாக இது மாறிவருகிறது. குறிப்பாக நகரங்களில், பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத் தேர்வாக மின்சார ஸ்கூட்டர்கள் முன்னிலையில் உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

25

டிவிஎஸ் ஸ்கூட்டர்

Image Credit : x

டிவிஎஸ் ஸ்கூட்டர்

குடும்ப ஆப் மனதில் கொண்டுள்ள மாடல்களில் டிவிஎஸ் iQube முக்கியமான இடம் பெறுகிறது. விரிவான இருக்கை, சீரான சஸ்பென்ஷன், மற்றும் 94 கி.மீ முதல் 212 கி.மீ வரை மாறும் ரேஞ்ச் இவை அனைத்தும் நகரப் பயணத்தை சிரமமின்றி மாற்றுகின்றன. விலை சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.71 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இதேபோல், Ather Rizta குடும்ப ஸ்கூட்டராகவே சந்தையில் அறிமுகமானது. 123–159 கி.மீ ரேஞ்ச், பெரிய ஸ்டோரேஜ் ஸ்பெஸ், மற்றும் கனெக்டெட் வசதிகள் ஆகியவை இதன் பலமாகும்.

35

பஜாஜ் சேடக்

Image Credit : Google

பஜாஜ் சேடக்

சற்றே பாரம்பரிய வடிவத்துடன், நம்பகமான பயண அனுபவத்தை வழங்கும் மாடலாக பஜாஜ் சேடக் C2501 குறிப்பிடப்படுகிறது. மெட்டல் உடல் அமைப்பு, சுமார் 113 கி.மீ ரேஞ்ச், மற்றும் வேகமான சார்ஜிங் வசதி என இவை எல்லாம் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக உள்ளது. விலை ரூ.90,000 முதல் தொடங்குகிறது. பழக்கமான ஸ்கூட்டர் உணர்வை விரும்புவோருக்கு இது ஒரு நிச்சயமான தேர்வாக பார்க்கப்படுகிறது.

45

ஓலா ஸ்கூட்டர்

Image Credit : our own

ஓலா ஸ்கூட்டர்

பட்ஜெட்டை கருத்தில் கொண்டவர்களுக்கு ஓலா S1 X ஒரு சிறந்த விருப்பமாக இருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மாடல், மேம்பட்ட மாடல்களில் 320 கி.மீ வரை செல்லும் ரெஞ்சை வழங்குகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, குறைந்த ரன்னிங் செலவு—இவை அனைத்தும் இளைஞர்கள் மட்டுமல்ல, குடும்பப் பயனாளர்களையும் ஈர்க்கின்றன. ஆரம்ப விலை சுமார் ரூ.50,000 (எக்ஸ்-ஷோரூம்) என்பதால் இது மிகவும் அணுகத்தக்கதாக உள்ளது.

55

விடா ஸ்கூட்டர்

Image Credit : Google

விடா ஸ்கூட்டர்

நகரப் பயணத்தை எளிதாக்கும் மற்றொரு மாடல் Hero MotoCorp நிறுவனத்தின் Vida VX2. இலகுவான உடல், சுலபமான ஹேண்ட்லிங், மற்றும் 142 கி.மீ வரை செல்லும் ரேஞ்ச்—இவை புதிய பயனாளர்களுக்கு ஏற்றதாக அமைகின்றன. விலை சுமார் ரூ.77,590 முதல் தொடங்குகிறது. பல பேட்டரி விருப்பங்களுடன் வரும் இந்த மாடல், முதன்முறையாக மின்சார வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையான தொடக்கமாக இருக்கிறது.

Read Entire Article