அயர்லாந்தை வீழ்த்துவது உறுதி.. ஆஸ்திரேலியாவுக்கு பயம் கொடுத்த ஜிம்பாப்வே கேப்டன்!

2 hours ago 11

நாளை அயர்லாந்து அணியுடன் ஜிம்பாப்வே மோதுகிறது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றைப் பெற்ற பிறகு, இப்போது சறுக்கினால் ஜிம்பாப்வேயின் சமீபத்திய வெற்றிகளுக்கு எந்த அர்த்தமும் இருக்காது என்று அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா தெரிவித்தார். நாளை அயர்லாந்துக்கு எதிரான அடுத்த போட்டி உட்பட, வரவிருக்கும் ஒவ்வொரு ஆட்டமும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வென்றாக வேண்டிய போட்டி என்று ராசா கூறினார்.

நாங்கள் பெற்ற வெற்றிகளுக்கு அர்த்தம் இருக்காது

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிக்கந்தர் ராசா, ''நாங்கள் எப்போதும் எதார்த்தத்தை உணர்ந்தே இருக்கிறோம். இது நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை நோக்கிய பயணத்தின் ஒரு பகுதி என்பதை நாங்கள் அறிவோம். இப்போது ஒரு சறுக்கல் ஏற்பட்டால், இதுவரை நாங்கள் பெற்ற வெற்றிகளுக்கு எந்த அர்த்தமும் இருக்காது'' என்றார்.

ஒன்பது மாதங்களாக விடாமுயற்சி

ஜிம்பாப்வே அணியில் இந்த சரியான கலவையைக் கண்டறிய நீண்ட காலம் ஆனது என்றும், கடந்த 18 மாதங்களாக இந்த பயணத்தில் வெவ்வேறு கலவைகளை முயற்சி செய்து வருவதாகவும் ராசா குறிப்பிட்டார்.

"சரியான வீரர்களின் கலவையைக் கண்டறிய எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது. கடந்த 18 மாதங்களாக நாங்கள் இந்த பயணத்தில் இருக்கிறோம், வெவ்வேறு கலவைகளை முயற்சித்தோம். இந்தச் சூழல்களுக்கு எது உதவும், எது பொருந்தும் என்று நாங்கள் கண்டறிந்த பிறகு, கடந்த ஒன்பது மாதங்களாக அதையே பின்பற்றி வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

நாளை ஜிம்பாப்வே ஜெயித்தால் ஆஸ்திரேலியா வெளியேறி விடும்

ஜிம்பாப்வே தனது தொடக்க ஆட்டத்தில் ஓமனை 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 23 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, 'பி' பிரிவில் இலங்கைக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. நாளை அயர்லாந்து அணியுடன் ஜிம்பாப்வே மோதுகிறது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article