Last Updated:May 13, 2026 5:45 PM IST
அரசியல் கருத்துகளுக்காக முடக்கப்பட்ட 18 எக்ஸ் கணக்குகளை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை உத்தரவு, இந்த உத்தரவில் சட்டவிதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன என்றும், எந்தக் காரணங்களும் கூறப்படவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

அரசியல் ரீதியான கருத்துகளைப் பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கி தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசை விமர்சித்து கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி, எக்ஸ் தள கணக்குகளை முடக்க, தமிழக சைபர் கிரைம் கடந்த மே 8-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து வட தமிழக விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவர் சொக்கலிங்கம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் நையாண்டி செய்ததாகக் கூறி 18 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதற்கு எந்தக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த உத்தரவில் சட்டவிதிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன என்றும், எந்தக் காரணங்களும் கூறப்படவில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறி நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Location :
Chennai,Tamil Nadu
அரசியல் கருத்துகளை பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் : சைபர் கிரைம் உத்தரவுக்கு இடைக்காலத் தடை
.png)







English (US) ·