ஆசீர்வாதம் பெற்று தேர்வு எழுத சென்ற மாணவிகள்... புதுக்கோட்டையில் உணர்ச்சி பூர்வ காட்சிகள்…

2 hours ago 15

Last Updated:Mar 02, 2026 6:51 PM IST

பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றும், கை கொடுத்து வாழ்த்துகளை பெற்றும் மாணவிகள் மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் நுழைந்தனர்.

+

பெற்றோர்

பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெறும் மாணவர்கள் 

தமிழ்நாடு முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி மற்றும் அடுத்த கட்ட வாழ்க்கைப் பயணத்திற்கு முன்னேறும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் காலை முதலே மாணவிகள் பெற்றோருடன் பள்ளிகளுக்கு வந்தனர். தேர்வறைக்குள் செல்லும் முன் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றும், கை கொடுத்து வாழ்த்துகளை பெற்றும் மகிழ்ச்சியுடன் சென்ற காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.

தேர்வறைக்குள் நுழைந்த மாணவிகள் ஆசிரியர்களின் கால்களைத் தொட்டு வணங்கி, அவர்களின் வாழ்த்துகளுடன் தேர்வை எழுதத் தொடங்கினர். “பயப்படாமல் தேர்வு எழுதுங்கள், அனைத்து கேள்விகளுக்கும் பதில் எழுத முயற்சி செய்யுங்கள்” என்று ஆசிரியர்கள் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் மாணவிகளுக்கு தைரியமளிக்கும் வகையில் வாழ்த்துகள் தெரிவித்தனர். காவல்துறையினரின் ஊக்க வார்த்தைகள் தேர்வு மையத்தில் சிறப்பு சூழலை உருவாக்கின.

செய்தியாளர்: ரியாஸ்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Read Entire Article