ஆதியின் ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு தொடக்கம்.. ரசிகர்கள் உற்சாகம்!

2 hours ago 18

Last Updated:Feb 16, 2026 9:30 PM IST

ஆதி நடிக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

News18
News18

ஆதி நடிக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இந்தப் படத்தில் நாயகனாக ஆதி நடித்திருந்தார். நாயகியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இவர்களுடன் முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைத்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களுக்கு பேவரைட். 

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதனையும் ஏ.ஆர்.கே.சரணவன் இயக்குகிறார்.  இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர் உள்ளிடோர் நடிப்பதாகவும், சத்யராஜும் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படப்பணிகளை தொடக்கி வைத்தார். படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

Read Entire Article