பீட்டர் எல்பர்ஸ் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிஇஓ-ஆகப் பொறுப்பேற்றார். ஆனால் இப்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமாவுக்கான பின்னணி காரணங்கள் வெளியாகியுள்ளன.
12

Image Credit : x
இண்டிகோ விமான நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இண்டிகோ விமான நிறுவனம் அமைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டிலும் விமான சேவைகளை இயக்கி வருகிறது. குறிப்பாக மிக குறைந்த கட்டணத்தில் உள்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்கப்படுவதால் இந்த விமானத்துக்கு எப்போதும் வரவேற்பு அதிகம்.
இண்டிகோ சிஇஓ ராஜினாமா
அதே வேளையில் பாதுகாப்பு குறைபாடு, தாமதமாக புறப்படுதல், தாமதமாக வந்து சேருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இண்டிகோ விமானம் கொண்டுள்ளது. இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் சிஇஓ பீட்டர் எல்பர்ஸ், தனது பதவியை இன்று (மார்ச் 10) ராஜினாமா செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ராகுல் பாட்டியா, நிர்வாகத்தின் இடைக்காலப் பொறுப்பை ஏற்பார் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய ராகுல் பாட்டியா, 'தொழில்முறை நிர்வாகம், செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கொண்ட ஒரு விமான நிறுவனமாக இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதில் இண்டிகோ தொடர்ந்து தனது கவனத்தைச் செலுத்தும்' என்று தெரிவித்துள்ளார்.
22
Image Credit : Asianet News
ராஜினாமாவுக்கு காரணம் இதுவா?
பீட்டர் எல்பர்ஸ் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிஇஓ-ஆகப் பொறுப்பேற்றார். ஆனால் இப்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பீட்டர் எல்பர்ஸ் ராஜினாமாவுக்கான பின்னணி காரணங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடிகளால் சுமார் 3 லட்சம் பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்தச் சம்பவத்தால் நிறுவனத்திற்கு ரூ.2,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டது. இந்த சர்ச்சை நடந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், பீட்டர் எல்பர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
2 hours ago
18








English (US) ·