Last Updated:May 09, 2026 6:25 PM IST
எண்களை விட சட்டமன்றப் பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், நிதானமான போக்கின் மூலம் ஜனநாயகத்தின் உரையாடல் பண்பை மீட்டெடுக்க முடியும்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களுடன் விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் தவெக-வுக்கு நிபந்தனையற்ற நிலையில், தவெகவின் எண்ணிக்கை 118 ஆக எட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி மட்டுமே தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், விசிக, இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். தவெகவுக்கு சட்டமன்றப் பேரவையில் பெரும்பான்மைக்கான ஆதரவு கிடைத்தாலும், ஆட்சியமைக்கும் உரிமையை பெற்றிருந்தாலும் தவெக அமைக்கும் அரசு சிறும்பான்மை அரசாக (Minority Government) அமையவிருக்கிறது.
ஜனநாயக அரசியிலில் 'சிறுபான்மை அரசு' என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. பெரும்பான்மை பொருந்திய அரசுகளை விட இந்தியாவின் வராலாற்று முற்போக்கான திசைகளில் நகர்த்தியில் சிறுபான்மை அரசுகளுக்கு பெரும் பங்குண்டு. கடந்த காலத்து வெற்றிகளினின்றும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது.
உதாரண்மாக,1969-இல் இந்திரா காங்கிரஸ், நிறுவன காங்கிரஸ் என இரண்டாக பிளவுபட்ட போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தார். அப்போது, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தனர். இந்த ஆட்சி காலத்தின் போது தான், வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன, குறுநில மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. விளிம்பு நிலை மக்களுக்கான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றியமைத்ததில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்கு முக்கிய பங்குண்டு. 1991-இல் நரசிம்ம ராவ் பிரதமராகப் பொறுப்பேற்றபோது, அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை. ஆனாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடித்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தார். நரசிம்ம ராவ் தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை அடியோடு மாற்றியமைத்தார். தாராளமயமாக்கல் கொள்கையின் மூலம் இந்தியச் சந்தையை உலகிற்குத் திறந்துவிட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அசைக்கமுடியாததாக (Look East Policy) இருந்தது.
இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத ஆட்சியை 1977ம் ஆண்டு ஜனதா தளம் அமைத்தது. பல்வேறு சித்தாந்த எதிர்வுகள் கொண்ட கட்சிகள் ஒண்றினைந்து காங்கிரஸ் கட்சியை அப்புறப்படுத்தினர். பெரும்பான்மை இல்லாத போதும் நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை நீக்கி, தனிமனித உரிமைகளை மீண்டும் நிலைநாட்டியது
வி.பி. சிங்ன் சிறுபான்மை அரசுதான் 'மண்டல் கமிஷன்' பரிந்துரைகளை அமல்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA) போன்ற அடித்தட்டு மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
தமிழக வரலாற்றில் 2006-2011 காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஒரு சிறுபான்மை அரசுதான். காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஒருமுறை கூற நமிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வரவேவில்லை. சிறுபான்மை அரசு என்ற உணர்வை கூட மக்கள் மத்தியில் எதிர்கட்சிகளால் ஏற்படுத்த முடியவில்லை. சமசீர்க் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
எனவே, 118 எண்ணிக்கை இல்லாவிட்டாலும் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தாலும் தவெக-வால் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தலாம். குறிப்பாக, இடதுசாரிகள், விசிக ஆகிய கட்சிகளின் வழிகாட்டுதலுடன் ஆட்சியமைப்பது மாநிலத்துக்கு நல்லதாக அமையும் என அரசியல் விமர்சர்கள் தெரிவிக்கின்ற்னர்.
எண்களை விட சட்டமன்றப் பேரவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், நிதானமான போக்கின் மூலம் ஜனநாயகத்தின் உரையாடல் பண்பை மீட்டெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். இதுநாள் வரையில் தமிழக அரசியலில் இருந்து விடுபட்டு, உதிரிகளாக ஓரத்தில் நிற்கும் விளிம்பு நிலை மக்களுக்கான குரலாகவும் சிறுபான்மை அரசு ஒலிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!
வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.
இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.
உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.
.png)







English (US) ·