Last Updated:Apr 06, 2026 3:47 PM IST
பெட்ரோ கெமிக்கல் பொருட்களினால் பல்வேறு துறைகள் இயங்கி வருவதால் பாதிப்பை குறைக்கும் வகையில் மத்திய அரசு பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு வரிச்சலுகை அறிவித்துள்ளது.

மத்திய அரசு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவை வரும் போர் சூழல் காரணமாக உலகளாவிய அளவில் பெட்ரோல் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கியமான பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும் விதமாக முழுமையான வரிவிலக்கு வழங்கும் முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றைத் தாண்டி பெட்ரோ கெமிக்கல் பொருட்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமாக மருந்து உற்பத்தி, பெயிண்ட், டெக்ஸ்டைல் மற்றும் பொம்மை உற்பத்தி போன்ற பல துறைகள் பல்வேறு விதமான பெட்ரோகெமிக்கல் பொருட்களை உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் மத்திய அரசு இந்த புதிய வரிவிலக்கு அறிவித்துள்ளது. அமோனியம் நைட்ரேட், மெத்தனால், ஸ்டைரின், அசிட்டிக் ஆசிட் மற்றும் பாலிவினைல் குளோரைடு (PVC) போன்ற முக்கிய பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் வெளிநாட்டு இறக்குமதிக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமோனியம் நைட்ரேட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியும் ஏப்ரல் 2 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிலக்கு மூலம் விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களுக்கான செலவு குறையும். மத்திய அரசே ஏற்கனவே மார்ச் 27ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை குறைத்தது.
உள்நாட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெட்ரோ கெமிக்கல் பொருட்களினால் பல்வேறு துறைகள் இயங்கி வருவதால் இந்த அனைத்து துறைகளும் உலக நாடுகளில் போர் முடிவுற்றால் மட்டுமே சீராகும் எனவும், சிறு மற்றும் நடுத்தர வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தை மீண்டும் சீராக செய்ய குறைந்தபட்சம் ஒரு வருடம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கின்றனர் நிபுணர் குழுவினர்.

இன்று 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம்!
விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை.
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேகமூட்டம்.
.png)





English (US) ·