ஈரோடு இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை 5 பேருக்கு மறுவாழ்வு – அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

2 hours ago 10

ஈரோடு, மே 10 சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஈரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் முன்வந்து கொடையாக அளித்துள்ளனர். இதன் மூலம் அய்ந்து பேர் புதிய வாழ்வைப் பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் (27) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவித்தனர்.

தங்களது மகனை இழந்த ஆறாத் துயரத்திலும், பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் கார்த்திக் குமாரின் உடல் உறுப்புகளை கொடையாக அளிக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து அவரது உடலில் இருந்து: இதயம் கண்கள் சிறுநீரகங்கள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு கொடையாக அளித்த கார்த்திக் குமாரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினர். இளைஞரின் இந்தத் தியாகமும், பெற்றோரின் மனிதாபிமான செயலும் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article