புதுடெல்லி: பிப்ரவரி 7-
உபெர், ஓலா, ரேபிடோ ஓட்​டுநர்​கள் இன்று நாடு தழு​விய வேலைநிறுத்​தத்​துக்கு அழைப்பு விடுத்​துள்​ளனர்.
அதன்படி ஆயிரக்​கணக்​கான ஓட்​டுநர்​கள் குறைந்​தது ஆறு மணி நேரத்​திற்கு செயலியி​லிருந்து வெளி​யேறி தங்​களது பணி​களை நிறுத்​தத் திட்​ட​மிட்​டுள்​ளனர். ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் வாடகை கார்​கள், ஆட்டோ மற்​றும் பைக் டாக்​சிகளின் சேவை விடு​முறை நாளான இன்று கடுமை​யாக பாதிக்​கப்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.
தெலங்​கானா கிக் மற்​றும் பிளாட்ஃ​பார்ம் தொழிலா​ளர் சங்​கம் இந்த வேலைநிறுத்​தத்தை அறி​வித்​துள்​ளது. இதற்கு தேசிய அளவி​லான பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ளன.