எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு மணி நேரம் பேசிய நயினார் நாகேந்திரன் – சந்திப்பில் நடந்தது என்ன?

2 hours ago 18

Last Updated:Feb 16, 2026 9:31 PM IST

எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் மற்றும் எல். முருகன் ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

News18
News18

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் சுமார் 1.15 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக அடுத்தடுத்த பணிகளை முன்னெடுத்துவருகின்றன. அந்தவகையில், என்.டி.ஏ. கூட்டணியில் அதிமுக தலைமையில் பாஜக இணைந்த பின் ஏற்கனவே பிரிந்துச் சென்ற கட்சிகளும் கூட்டணிக்குள் வந்துள்ளன.

இதனையடுத்து, கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு சேர்ந்து மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவைத்தார். மேலும், தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையபோகிறது எனும் கேள்வி தொடர்ந்து இருந்துவரும் சூழலில், நேற்று ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றிருந்தனர். அங்கு அவர்கள் சுமார் 20 நிமிடம் பேசியதாக சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில், வரும் மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழ்நாடுக்கு வருகை தர இருக்கிறார். அதற்குள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் எனவும் சொல்லப்பட்டுவருகிறது. இதன் பின்னணியில் இன்றைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோரின் சந்திப்பும் 1 மணி நேரம் 15 நிமிட பேச்சும் மிகவும் கவனம் பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

Read Entire Article