எதிரணிகளை அலற விடும் யார்க்கர் கிங்.. டி20 உலகக்கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை!

1 hour ago 17

டி20 உலகக்கோப்பையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read

Published : Feb 22 2026, 10:44 PM IST

13

ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை

Image Credit : AFP

ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை

உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கை முந்தி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

23

டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்

Image Credit : AFP

டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள்

32 வயதான பும்ரா, 22 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் 33 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 13.36 ஆகும். பும்ரா இதுவரை 22 டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 2016 மற்றும் 2024 ஆகிய டி20 உலகக்க்கோப்பை தொடர்களிலும் விளையாடியுள்ளார். பும்ராவை அடுத்து இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார். முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் 32 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.

33

பவுலிங்கில் கலக்கிய பும்ரா

Image Credit : AFP

பவுலிங்கில் கலக்கிய பும்ரா

முன்னதாக இன்றைய சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அதிரடியில் பட்டைய கிளப்பிய டேவிட் மில்லர் 35 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 63 ரன்கள் அடித்தார். டிவால்ட் பிரேவிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 44 எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அர்ஷ்தீப் சிங் 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

Read Entire Article