தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள நடிகர் விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார கூட்டங்களை நடத்த . அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரங்களை நடத்தினார்.
இதனை தொடர்ந்து கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவத்தையடுத்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடி நிர்மல்குமார் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.