Last Updated:Feb 09, 2026 11:18 AM IST
சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்கள் தாம்பரம்–சென்னை கடற்கரை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, புறநகர் ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த பணிகளின் காரணமாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ஆம் தேதி வரை, தினமும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, வழக்கமாக 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் இயக்கப்படும் சில மின்சார புறநகர் ரெயில்கள், 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.
செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில்கள் 6-வது நடைமேடையில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் ரயில்கள் 5-வது நடைமேடையில் வந்து சேரும். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும்
சில மின்சார ரயில் சேவைகள் முழுமையாகவும், சில சேவைகள் பகுதி நேரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 8.55, 10.20 மற்றும் 11.30 மணிக்கு தாம்பரம் செல்லும் ரயில்கள் முழுவதுமாக நிறுத்தப்படுகின்றன.
அதேபோல், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 9.05, 10.10 மற்றும் 11.15 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்கள் தாம்பரம்–சென்னை கடற்கரை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், நேற்று மற்றும் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமைகள்) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.30, 10.00, 11.40 மணிக்கு தாம்பரம் செல்லும் ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து இரவு 10.00, 11.00, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கி வரும் ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் வாங்கும் வெள்ளி அசலா? போலியா? கண்டுபிடிப்பது எப்படி?
வெள்ளி விலை உயர்வால் போலி வெள்ளி சந்தையில் அதிகமாக நுழைவதாக எச்சரிக்கை.
ஹால்மார்க், காந்த, ஒலி, பனி, அமில சோதனைகள் மூலம் வெள்ளி அசலா என அறியலாம்.
உண்மையான வெள்ளி கண்டறிய எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் கன் பயன்படுத்தப்படுகின்றது.
.png)





English (US) ·