எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு தின விழா அறிக்கை

23 hours ago 17

திருச்சி எஸ்ஆர்எம் செவிலியர் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு தின விழா 09.05.2026 எஸ்ஆர்எம் வளாகத்தில் நடைபெற்றது. தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் மற்றும் திரளான கூட்டத்தை கல்லூரியின் முதல்வர் Dr.சுஜா சுரேஷ் அவர்கள் வரவேற்றார். எஸ்ஆர்எம் ராமாபுரம் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி வளாகத்தின் தலைவர் டாக்டர்.ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மகப்பேறு கவுன்சில் பதிவாளர் பேராசிரியர் டாக்டர் ஆர்.சங்கர் சண்முகம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்த தலைசிறந்த நிறுவனத்தில் தங்கள் குழந்தைகளை சேர்த பெற்றோர்களுக்கும் மற்றும் தேர்வான பட்டதாரிகள் அனைவருக்கும் சிறப்பு விருந்தினர் வாழ்து தெரிவித்தார். எஸ்ஆர்எம் திருச்சி செவிலியர் கல்லூரியின் தரமான கல்வி மற்றும் சேவைகளைப் பாராட்டிய அவர், நேர்மை மற்றும் தரத்தை நிலைநிறுத்தும் இந்த தகுதி வாய்ந்த நிறுவனத்தில் பட்டம் பெறுவது மிகச்சிறப்பு என்று கூறினார். செவிலியர்களின் பார்வை, தலைமைத்துவம் மற்றும் செவிலியர் தொழிலில் ஆராய்சியின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதில் 115 செவிலியர் மாணவிகளுக்கு இளங்கலை பட்டமும் மற்றும் 6 மாணவிகளுக்கு 7 மெரிட் விருதுகளும் வழங்கப்பட்டன. பட்டதாரிகளுக்கு முதல்வர் உறுதிமொழி செய்து வைத்தார். நிகழ்வில் எஸ்ஆர்எம் துணைத் தலைவர் திரு.நிரஞ்சன் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் போது துணை முதல்வர் திருமதி தேவி.K பட்டதாரிகளை அறிமுகப்படுத்தினார். தேசிய கீத்துடன் விழா நிறைவடைந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

Read Entire Article