ஒரு ஏடிஎம்மில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் இருக்கும்? என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். ஏடிஎம் அமைந்துள்ள இடம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து வங்கிகள் இந்த அளவைத் தீர்மானிக்கின்றன.
14

Image Credit : Asianet News
ஏடிஎம் பணம் அளவு
நாம் தினமும் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் மிகவும் சாதாரணமாகத் தோன்றும். கார்டை உள்ளே செலுத்தி, ரகசிய பின் எண்ணை (PIN) பதிவிட்டவுடன் சில வினாடிகளில் பணம் கையில் வந்து விடுகிறது. ஆனால் இந்த எளிமைக்குள், மிகச் சிக்கலான தொழில்நுட்ப அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. வங்கி கிளைக்குச் செல்லாமல், எந்த நேரமும் பணம் பெற முடியும் என்பதாலேயே ஏடிஎம் நமது அன்றாட வாழ்க்கையின் அவசியமான ஒரு பகுதியாக மாறியுள்ளது.
24
Image Credit : Getty
ஏடிஎம் நோட்டுகள்
ஆனால் பல நேரங்களில் “ஏடிஎமில் பணம் இல்லை” என்ற அறிவிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்திருப்போம். அப்போது, “ஒரு ஏடிஎம்மில் அதிகபட்சமாக எவ்வளவு பணம் இருக்கும்?” என்ற கேள்வி பலருக்கும் தோன்றும். உண்மையில், ஏடிஎம் இயந்திரத்துக்குள் ஒரு சிறப்பு பணப்பெட்டி (Cash Cassette) இருக்கும். அந்த பெட்டியில் குறிப்பிட்ட அளவு நோட்டுகள் மட்டுமே வைக்க முடியும். பொதுவாக, ஒரு ஏடிஎமில் ஒரே நேரத்தில் சுமார் 8,000 முதல் 10,000 நோட்டுகள் வரை நிரப்பலாம்.
34
Image Credit : Asianet News
ஏடிஎம் பணம் வரம்பு
இந்த அனைத்து நோட்டுகளும் ரூ.500 மதிப்பிலானவை என்றால், ஒரு ஏடிஎம்மில் ஒரே நேரத்தில் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் வைக்க முடியும். ஆனால் நடைமுறையில் அப்படியே இருப்பது அரிது. ஏனெனில், ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் மட்டுமல்லாமல் ரூ.100, ரூ.200 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளும் சேர்த்து வைக்கப்படுகின்றன. இதனால் மொத்தமாக வைக்கப்படும் பணத்தின் மதிப்பு குறைந்து விடுகிறது.
44
Image Credit : Asianet News
ஏடிஎம்மில் எவ்வளவு பணம் இருக்கும்?
மேலும், ஒரு ஏடிஎமில் எவ்வளவு பணம் நிரப்ப வேண்டும் என்பதை வங்கிகள் தீர்மானிக்கின்றன. அந்த ஏடிஎம் அமைந்துள்ள இடம், மக்கள் பயன்பாட்டு அளவு, நகரமா கிராமமா போன்ற காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் சில ஏடிஎம்களில் குறைவான பணமும், சில இடங்களில் அதிகமான பணமும் இருக்கும். சராசரியாகப் பார்த்தால், ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பணம் இருப்பதாகக் கூறலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
.png)
2 hours ago
8







English (US) ·