Pandian Stores 2 Police Arrest Scene Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வாரம் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளது.
17

Image Credit : Vijay TV You Tube
Will Pandian save his family from police?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாக்கியம் கொடுத்த புகாரால் வீடு புகுந்து பாண்டியன் குடும்பத்தினர் அனைவரையும் போலீஸ் கைது செய்தது. பாக்கியத்தின் இந்த பழிவாங்கும் படலம் பாண்டியன் குடும்பத்தை சிதறடிக்குமா? இன்றைய விறுவிறுப்பான புரோமோ அப்டேட் பற்றி பார்க்கலாம். இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்பதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27
Image Credit : Vijay TV You Tube
Pandian Stores 2 serial upcoming twists and spoilers
காரணம் என்னவென்றால், அந்த மாதிரியான காட்சிகள் இந்த வாரம் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான எபிசோடில் இடம் பெற்றுள்ளது. இந்த வாரம் என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்பதற்கு முன்னதாக கடந்த வார கிளைமேக்ஸ் காட்சியாக முதலில் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுப்போம் என்று செந்தில் சொன்னதைக் கேட்டு வீட்டு பிரச்சனைக்கு எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று கேட்டார். ஆனால், கடைசியில் உங்களை நான் சும்மாவே விடமாட்டேன். இன்றோடு உங்களது குடும்ப நிம்மதி தொலைந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். விவாகரத்து எப்படி நீங்கள் வாங்குறீங்க என்று நான் பாக்குறேன் என்று சபதம் போட்டார். அதோடு கடந்த வார காட்சி முடிந்தது.
37
Image Credit : Vijay TV You Tube
Pandian Stores 2 December 2025 Update
இனி இந்த வாரத்திற்கான புரோமோவில் அப்பா, நான் மயிலுக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன் என்று சரவணன் சொல்ல, அடுத்து உண்மையாகவே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்க என்று சொல்லி தங்கமயில் கதறி அழுதார். இதைத் தொடர்ந்து பாக்கியம் மற்றும் மாணிக்கம் இருவரும் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்து அய்யோ அய்யோ என்னுடைய பொண்ணூ வழ்க்கையை இப்படி நாசம் பண்ணிட்டாங்க என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
47
Image Credit : Vijay TV You Tube
Vijay TV Serial Latest News
பின்னர் இன்ஸ்பெக்டர் அவரை உள்ளே அழைத்து என்ன என்று விசாரிக்க, பாக்கியம் வரதட்சணையாக பணம் வாங்கிக் கொண்டு வா, சீர் வாங்கிக் கொண்டு வா, நகை வாங்கிட்டு வா என்று சொல்லி டார்ச்சர் பண்ணி என்னுடைய பொண்னை அடிச்சு அனுப்பிவிட்டுட்டாங்க என்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டரோ கம்ப்ளைண்ட் கொடுக்க சொல்ல ஒருத்தர் விடாமல் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய பெயரையும் சொல்லிவிட்டார்.
57
Image Credit : Vijay TV You Tube
Pandian Stores 2 Police Arrest Scene
அடுத்த காட்சியாக பாண்டியன் வீட்டை தேடி வந்த போலீஸ், உங்களது மருமகள் வீட்டார் உங்கள் மீது கம்ப்ளைண்ட் கொடுத்துருககாங்க என்று சொல்லி கோமதி, ராஜீ மற்றும் அரசி ஆகியோரை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். இதே போன்று பாண்டியன் கடைக்கு சென்று ஸ்டேஷனில் உங்கள் எல்லோர் மீதும் கம்ப்ளைண்ட் வந்திருக்கு. மரியாதையாக வந்து வண்டியில் ஏறுங்க என்று சொல்ல பாண்டியன், கதிர், சரவணன் என்று எல்லோரும் ஜீப்பில் ஏறி ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள். இதில் மீனா, செந்தில் மற்றும் குழலி ஆகியோர் புரோமோவில் கைது செய்யப்படவில்லை. அதோடு இந்த வாரத்திற்கான புரோமோ முடிகிறது. இனி ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
67
Image Credit : Vijay TV You Tube
Bakkiyam Revenge in Pandian Stores 2
இன்றைய காலகட்டத்தில் திருமணமான கணவன் மனைவியை பிரிய விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடும் போது மனைவியோ அவரது குடும்பத்தினரோ கணவர் குடும்பத்தை பழி வாங்க வரதட்சணை புகார் கொடுக்கிறார்கள். இதையடுத்து கணவர் குடும்பத்தினர் மீது எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது இது தான் இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.
77
Image Credit : Vijay TV You Tube
Pandian Stores 2 Serial Today Promo
இதே போன்று தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் நடக்கிறது. அடுக்கடுக்காக பொய் சொல்லி கணவரையும், அவரது குடும்பத்தையும் ஏமாற்றிய தங்கமயிலுக்கு எதிராக சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப, அவரது குடும்பத்தினர் இப்போது வரதட்சணை புகார் கொடுத்துள்ளனர்.
.png)
16 hours ago
14




English (US) ·