ஒரே ஆண்டில் 4.8 லட்சம் விபத்து 1.7 லட்சம் பேர் பலி! தேசிய குற்ற ஆவணப் பணியகம் தகவல்

1 hour ago 10

புதுடில்லி, மே 10 தேசிய குற்ற ஆவணப் பணியகம் 2024ஆம் ஆண்டிற்கான சாலை விபத்து தொடர்பான ஆண்டு அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.

அதில்,“2024ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 4,67,967 சாலை விபத்துகள் பதிவாகி யுள்ளன. சுமார் 1.7 லட்சம் பேர் உயிரிழந்துள் ளனர். 4.5 லட்சத்திற்கும் அதிகமானோர் காய மடைந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டில் பதிவான விபத்து, 2023இல் பதிவான 4,64,029 விபத்துகளை விட அதிகமாகும்.

இந்தியாவில் சாலை விபத்து உயிரிழப்புகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

2024இல் தமிழ்நாட்டில் 67,296 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துக்களில் 20,390 பேர் உயிரிழந்துள்ளனர். இது தேசிய அளவில் 10.2 சதவீதமாக உள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்து, 55,771 விபத்துகள் மூலம் மத்தியப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும், கேரளம் (46,591) மூன்றாம் இடத்திலும், கருநாடகா (43,062) நான்காம் இடத்திலும், உத்த ரப்பிரதேசம் (38,417) அய்ந்தாவது இடத்திலும், மகா ராட்டிரா (36,051) ஆறாம் இடத்திலும், தெலுங் கானா (25,986) ஏழாம் இடத்திலும் உள்ளன.

டில்லி முதலிடம்

நகரங்களில் புதுடில்லி 5,573 விபத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (4,769) இரண்டாம் இடத்திலும், சென்னை (4,200) மூன்றாம் இடத்திலும், அய்தராபாத் (3,785) நான்காம் இடத்திலும், மும்பை (3,200) 5ஆவது இடத்திலும் உள்ளன.

அதே போல தேசிய அளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அதிகளவில் (48.3%) விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

குறிப்பாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் விபத்துக்கள் (54.2%), உயிரிழப்புகள் (61.8%) அதிகமாக உள்ளன.

விபத்துகள் அதிக மாக நடக்கும் நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகும்.

நாடு முழுவதும் பதிவான விபத்துகளில் சுமார் 20% இந்த நேர இடைவெளியிலேயே நடக்கின்றன.

வாகனங்களில் செல்லாத பாதசாரிகளும், அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர்.

மொத்த விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 30% நடக்கின்றன. ஆனால் உயிரிழப்புகள் இங்குதான் மிக அதிகம்.

50%க்கும் அதிகமான விபத்துகள் மாநில, மாவட்ட சாலைகளில் நிகழ்கின்றன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article