கடலோரப் பின்னணியில் இரட்டை வேடத்தில் அதர்வா

18 hours ago 19

Atharvaa in a dual role in a coastal setting

Director Jeeva Shankar, known for films like 'Naan' and 'Amarakavyam', returns after nine years with 'Valai', starring Atharva. Arya and Vijay Sethupathi released the film's teaser. Atharva plays dual roles, 'Kutti' and 'Sara', in this revenge story set in a coastal fishing community. Vaani Bhojan and Rupa Manjari also star. Gibran composed the music, and the film is expected to be released soon.

Generated by AI

‘நான்’, ‘அமரக்காவியம்’, ‘எமன்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஜீவா சங்கர். ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் முத்திரை பதித்த இவர், ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘வலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். இதில் அதர்வாவுடன் வாணி போஜன், ரூபா மஞ்சரி ஆகியோர் நடித்துள்ளனர்.

‘குட்டி’, ‘சாரா’ என இரு மாறுபட்ட தோற்றங்களில் அதர்வா நடிக்கிறார். கடல் சார்ந்த பகுதியிலும் மீனவர்கள் வாழ்வியலை ஒட்டியும் நகரும் பழிவாங்கும் கதைக்களமாக இது அமைந்துள்ளது. முன்னோட்டக் காட்சிகளைப் பார்க்கும்போது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிகிறது.

ஜிப்ராஜ் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Read Entire Article