கணவரை இழந்த பெண் முதல்வரிடம் வைத்த கோரிக்கை! கடினமான பாதையில் முதல் பெண் நடத்துநர்

8 hours ago 18

Last Updated:Feb 07, 2026 10:16 PM IST

குன்னூர் போன்ற மலைப்பிரதேச வளைவுகள் நிறைந்த கடினமான பாதையில் பெண் ஒருவர் நடத்துநராகப் பணியேற்பது இதுவே முதல் முறை.

News18
News18

நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளையில் முதல்முறையாகப் பெண் ஒருவர் நடத்துநர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

குன்னூர் அருகே வெள்ளாளபுரத்தைச் சேர்ந்தவர் தீபா. இவருடைய கணவர் ரவி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட உதகமண்டலம் மற்றும் குன்னூர் கிளைகளில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி மாரடைப்பு காரணமாகத் திடீரென உயிரிழந்தார். கணவரின் மறைவால் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய சூழலில் இருந்த தீபா, தனக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு தந்திருந்தார்.

இந்த நிலையில், தீபாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப உடனடியாகக் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில், கோவை கோட்டம் குன்னூர் கிளையில் நடத்துநராகத் தீபா நியமிக்கப்பட்டார். பணி நியமன ஆணை பெற்றதைத் தொடர்ந்து, குன்னூர் முதல் கோரக்குந்தா வரை செல்லும் அரசுப் பேருந்தில் தீபாவுக்கு பணி ஒதுக்கப்பட்டது.

வழக்கமாகச் சமவெளிப் பகுதிகளில் பெண் நடத்துநர்கள் பணியாற்றி வரும் நிலையில், குன்னூர் போன்ற மலைப்பிரதேச வளைவுகள் நிறைந்த கடினமான பாதையில் பெண் ஒருவர் நடத்துநராகப் பணியேற்பது இதுவே முதல் முறையாகும்.

First Published :

Feb 07, 2026 10:16 PM IST

Read Entire Article