கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நடவடிக்கை - மத்திய அரசு

2 hours ago 8

Last Updated:Jul 23, 2026 10:28 PM IST

திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியுடன் இணைந்து இவ்வாண்டு செப்டம்பர் 3-ல் சாகித்ய அகாடமி சார்பில் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நடவடிக்கை
கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட நடவடிக்கை

இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் டாக்டர் எம் தனபால் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக் குழுவுக்குக் கவியரசு கண்ணதாசனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவது குறித்த கோரிக்கை வந்ததாகவும், அது 2026 பிப்ரவரியில் நடைபெற்ற குழுவின் 73-வது கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் திருச்சிராப்பள்ளியில் உள்ள பிஷப் ஹெபர் கல்லூரியுடன் இணைந்து இவ்வாண்டு செப்டம்பர் 3-ல் சாகித்ய அகாடமி சார்பில் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

1980-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற அவரது புகழ்பெற்ற நாவலான ‘சேரமான் காதலி’ 2019-ம் ஆண்டில் தெலுங்கு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. சாகித்ய அகாடமி நிறுவனம் 'கவிஞர் கண்ணதாசன் கவிதைகள்' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ள நிலையில், அப்புத்தகம் இதுவரை 3 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ‘இந்திய இலக்கியத்தை உருவாக்கியவர்கள்’ என்ற வரிசையின் கீழ் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டு, இதுவரை 9 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

First Published :

Jul 23, 2026 10:28 PM IST

Read Entire Article