ஹமாஸ் - டோக்முஷ் மோதலில் சலே அல்ஜஃபராவி என்ற 28 வயது பத்திரிகையாளர் மரணித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
Published:Today at 7 PMUpdated:Today at 7 PM
காசாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதி திட்டத்தின்படி பணயக் கைதிகள் ஒப்படைக்கப்படவிருந்த சூழலில் ஹமாஸ் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களிடையே கடும் மோதல் எழுந்துள்ளது.
இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் ஹமாஸ் வீரர்கள், 19 பேர் டக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள்.
காசாவின் சப்ரா பகுதியைச் சேர்ந்த டக்முஷ் குழுவினர். இவர்களை அல் டோக்முஷ் குடும்பப் போராளிக் குழு என்றும் அழைக்கின்றனர்.
காசா
அமெரிக்க செய்திதளமான ஃபாக்ஸ் நியூஸ் கூறுவதன்படி நேற்று (அக்டோபர் 12) டோஷ்முக் குழுவினரின் உறைவிடத்தைச் சூழ்ந்த ஹமாஸ் குழுவினர் பல இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
சுமார் 300 ஹமாஸ் வீரர்கள் டோஷ்முக் குடியிருப்புப் பகுதியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மொத்தமாக 52 டோஷ்முக் குழுவினரும் 12 ஹமாஸ் வீரர்களும் இறந்திருக்கலாம்.
மேலும் இந்த மோதலில் சலே அல்ஜஃபராவி என்ற 28 வயது பத்திரிகையாளர் மரணித்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இந்த பத்திரிகையாளர் ஹமாஸ் உடன் தொடர்புள்ளவர் என்றும் டோக்முஷ் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டக்முஷ் குடும்பம் காசாவில் உள்ள முக்கியமான குலங்களில் ஒன்று. இவர்களுக்கு ஹமாஸுடன் நீண்ட நாட்களாக பதட்டமான உறவு நீடிக்கிறது.
இந்த குலத்தின் ஆயுதமேந்திய வீரர்கள் கடந்த காலங்களில் பலமுறை ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஹமாஸ்
சமீபத்தில் டோஷ்முக் குலத்தின் ஆயுதமேந்திய வீரர்கள் சிலர் இரண்டு ஹமாஸ் வீரர்களைக் கொலை செய்ததுடன் 5 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதற்காகவே அவர்கள்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.
டோஷ்முக் இனக்குழு வசித்த சப்ரா பகுதி இஸ்ரேலின் தாக்குதலில் பெருமளவில் சிதைந்துவிட்டதால் ஒருகாலத்தில் ஜோர்தானிய மருத்துவமனையாக திகழ்ந்த கட்டடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆனால் இந்த இடத்தை புதிய ராணுவ தளமாக அமைக்க நினைத்த ஹமாஸ் அவர்களை வெளியேற உத்தரவிட்டதாகவும் இது மோதலுக்கான காரணமாக இருக்கக்கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
காசா
ஹமாஸில் இப்போது 7,000 வீரர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேறும் பகுதிகளை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக பல மாவட்டங்களில் மீண்டும் ஹமாஸ் காவல்துறையினர் அல்லது சிவில் பணியாளர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அதனை ஹமாஸ் மறுத்துள்ளது. சில டோக்முஷ் மக்கள் "யூதர்கள் இங்கு வந்தபோது ஹமாஸ் படையினர் எங்கே சென்றிருந்தனர்" எனக் கேள்வி எழுப்பியதாக ஊடகங்கள் கூறுகின்றன.