Last Updated:Jul 23, 2026 3:09 PM IST
"காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு பழங்குடியினர் முன்னேற்ற சிறப்புச் செயல் திட்ட நிதி ரூ. 6 கோடியை பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது” என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது" என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர், குழந்தைகளை கல்வியை நோக்கி ஈர்த்துவர மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தை காமராஜருக்கு பின் முதலமைச்சர்களாக இருந்த அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் மேம்படுத்தி அதனை இன்னும் சத்தானதாக மாற்றிவந்தனர்.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 2026ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், இந்தத் திட்டத்தை 8ஆம் வகுப்பு வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில், நேற்று ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டுவந்த திட்டத்தின் பெயரை மாற்றி, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணையில், “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.டி.வி. தினகரன், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும்.
காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“காலை உணவுத் திட்டத்திற்கு பழங்குடியினர் நிதி ரூ. 6 கோடி பயன்படுத்துவதா?” - டி.டி.வி. தினகரன் அதிருப்தி
ஸ்டாலின் கொண்டுவந்த காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்.
பழங்குடியினர் நிதியை பயன்படுத்துவதாக அரசாணை.
காட்டமாக விமர்சித்த டி.டி.வி. தினகரன்.
.png)







English (US) ·