புதுடெல்லி, மே 2- இந்​திய பெருங்​கடல் – பசிபிக் கடல் பிராந்​தி​யத்​தில் இந்​தியா வலு​வடைய கிரேட் நிகோபார் உள்​கட்​டமைப்பு திட்டங்கள் மிக​வும் அவசி​யம் என்று மத்​திய அரசு விளக்​கம் அளித்துள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி அண்​மை​யில் நிகோபார் தீவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டார். அப்​போது அவர் கூறும்​போது, “கிரேட் நிகோ​பார் திட்​டம், இயற்கை மற்​றும் பழங்​குடி மக்​களுக்கு எதி​ரான மிகப்​பெரிய மோசடி’’ என்று குற்றம் சாட்டி​னார்.இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கிரேட் நிகோபர் திட்​டத்​தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்​கிய திட்​டங்​கள் செயல்​படுத்​தப்பட உள்​ளன. ஆசி​யா, ஐரோப்பா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​களுக்கு இடையே பயணிக்​கும் சரக்கு கப்​பல்​களை சிங்​கப்​பூர், கொழும்பு துறை​முகங்​கள் கையாள்​கின்​றன. இதற்கு மாற்​றாக இந்​தி​யா​வின் நிகோ​பார் தீவின் கலாத்​தியா வளை​கு​டா​வில் மிகப்​பெரிய துறைமுகம் அமைக்​கப்பட உள்​ளது. இதன்​மூலம் சர்​வ​தேச கடல் வணிக போக்​கு​வரத்​தில் இந்​தியா மிக முக்​கிய இடத்​தைப் பிடிக்கும். மேலும், ராணுவத்துக்குப் பயன்படும் வகையிலும் இந்தத் துறைமுகம் இருக்கும். நிகோ​பார் தீவில் பிரம்​மாண்ட கிரீன்​பீல்ட் சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டப்பட உள்​ளது. இதுவும் ராணுவ பயன்​பாட்​டுக்​கும் ஏற்​ற​தாக வடிவ​மைக்​கப்​படும். இதன்​மூலம் சுற்றுலா, சரக்கு போக்​கு​வரத்து மேம்​படும். விமானப் படை​யின் வலு​வான தளமாக​வும் செயல்​படும்.நிகோபர் தீவில் குடி​யிருப்பு பகு​தி​கள், வணிக வளாகங்​கள், சுற்​றுலா வசதி​கள், பாது​காப்பு உள்​கட்​டமைப்​பு​கள் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய பிரம்​மாண்ட ஒருங்​கிணைந்த நகரம் உரு​வாக்​கப்பட உள்​ளது. இந்த நகரத்​தில் 5 லட்​சம் பேர் வரை வசிக்க முடி​யும்.