நடிகர் விஜய் நடித்த கில்லி மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி இருந்தன். அந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.
14

Image Credit : X
Ghilli vs Thunivu Re Release Day 1 Box Office
தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் ட்ரெண்ட் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் முன்பெல்லாம் ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்க சில பழைய பிளாக்பஸ்டர் படங்களை தேர்ந்தெடுத்து ரீ-ரிலீஸ் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஹிட் ஆன படங்கள் மட்டுமின்றி பிளாப் ஆன படங்களையும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்த ரீ-ரிலீஸாக புதுப்படங்கள் போதிய அளவில் தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றன. சொல்லப்போனால் புதுப் படங்களை காட்டிலும் ரீ-ரிலீஸ் படங்கள் தான் தியேட்டர்களில் அதிகளவில் ரிலீஸ் ஆகி வருகின்றன.
24
Image Credit : our own
கில்லி vs துணிவு ரீ-ரிலீஸ்
அந்த வகையில் நேற்று நடிகர் விஜய் நடித்த கில்லி படமும், அஜித் நடித்த துணிவு படமும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனது. இதில் கில்லி படம் ஏற்கனவே 2024-ம் ஆண்டு ரீ-ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்ட படம் என்பதால் அதற்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. அதே போல் அஜித்தின் துணிவு படத்திற்கும் கணிசமான அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக இந்த வாரம் ரிலீஸ் ஆன மை டியர் டோலி போன்ற படங்கள் போதிய அளவு தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.
34
Image Credit : instagram
பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
இந்த ரீ ரிலீஸ் மோதலில் அதிக வசூலை அள்ளிய படம் எது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். இதில் துணிவை விட இரண்டு மடங்கு அதிக வசூல் அள்ளி கில்லி திரைப்படம் மாஸ் காட்டி இருக்கிறது. கில்லி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.60 லட்சம் வசூலித்து இருந்தது. அதற்கு போட்டியாக திரைக்கு வந்த துணிவு படம் முதல் நாளில் வெறும் ரூ.25 லட்சம் மட்டுமே வசூலித்தது. இதனால் இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதலில் விஜய் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக ஜொலித்து வருகிறார்.
44
Image Credit : Google
ரீ-ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்
இந்த வாரம் கில்லி படம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில், வருகிற பிப்ரவரி 27-ந் தேதி விஜய்யின் தெறி படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ரஜினிகாந்த் நடித்து பிளாப் ஆன கோச்சடையான் படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டால் தமிழ் சினிமா அதளபாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதாக திரையுலகினர் புலம்புகிறார்கள். இந்த ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிவடையப் போகிறது. ஆனால் இதுவரை ஒரே ஒரு 100 கோடி வசூல் படத்தை மட்டும் தமிழ் சினிமா கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
.png)
1 hour ago
17





English (US) ·