கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைக் காக்க... கலெக்டர் கொடுத்த மாஸ் டிப்ஸ்...

1 hour ago 11

Last Updated:May 10, 2026 2:47 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், நெல், கரும்பு, மக்காச்சோளம், நிலக்கடலை, எள், காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாயிகள் நிலத்தில் உள்ள மண் ஈரப்பதத்தை பாதுகாக்க வயல்களில் பயிர்களுக்கிடையே காற்றோட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், வைக்கோல், கரும்புத் தோகை, தென்னை நார் கழிவு மற்றும் பாலித்தீன் மூடாக்கு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மண் வெப்பநிலை குறைந்து, நீர் ஆவியாகும் அளவும் குறையும் என கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

மேலும், சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை அதிகமாக பயன்படுத்தி குறைந்த நீரில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பில் பாசனம் செய்யலாம் என்றும், காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே நீர் பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெற்பயிர்களில் 3 செ.மீ. அளவிற்கு நீர் பராமரித்தல் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலை வெப்பத்தை குறைக்க 3 சதவீத கயோலின் கரைசல் அல்லது 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு கரைசலை தெளிக்கலாம் என்றும், PPFM (இளஞ்சிவப்பு நிறமி மெத்தைலோபாக்டீரியா) உயிர் நுண்ணுயிரி கரைசலை தெளிப்பது பயிர்களின் வறட்சி தாங்கும் திறனை அதிகரிக்கும் என்றும் வேளாண்மை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

கரும்பு பயிர்களில் தோகை மூடாக்கு அமைப்பதுடன், 2.5 சதவீத யூரியா மற்றும் 2.5 சதவீத பொட்டாஷ் கரைசலை இலை வழியாக தெளிக்கலாம். மேலும், மண் ஈரப்பதத்தை பாதுகாக்க கடைசி உழவின் போது ஏக்கருக்கு 10 டன் அளவில் தென்னை நார் கழிவினை அடி உரமாக மண்ணில் சேர்த்து உழவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் பயிரில் தானிய நிரப்புதலை மேம்படுத்த “TNAU Maize Maxim” நுண்ணூட்ட கலவையை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

நிலக்கடலை பயிரில் வெப்பத்தால் நில ஈரப்பதம் குறைவதை தடுப்பதற்காக ஜிப்சம் மற்றும் பாலித்தீன் படல மூடாக்கு பயன்படுத்தலாம். மேலும், பூக்கள் உதிர்வதை குறைக்கவும், காய்கள் நன்கு திரளவும் அதிகபட்ச பூக்கும் மற்றும் காய்ப்பிடிக்கும் பருவத்தில் 200 லிட்டர் நீரில் 2 கிலோ அளவில் TNAU நிலக்கடலை ரிச் கலந்து இலை வழி தெளிப்பாக பயன்படுத்தலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

வாழை, வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய் போன்ற பயிர்களில் பூ மற்றும் காய் உதிர்வை கட்டுப்படுத்த பொட்டாசியம் நைட்ரேட், போரான் மற்றும் நுண்ணூட்ட கலவைகள் தெளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மா பயிரில் காய் பிடிப்பை அதிகரிக்கவும், பழங்கள் உதிர்வதை குறைக்கவும் கடுகு அளவு காய் பருவத்தில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் இலை வழி தெளிப்பாக தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

மேலும், கோடை வெப்பத்தின்போது விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நேரடி வெயிலில் வயல்வெளிப் பணிகளை மேற்கொள்வதையும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும் என்றும், போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெப்பத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவுரை!

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வானிலை தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயிர் வாரியான அறிவியல் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டு, கோடை வெப்பத்தால் ஏற்படும் மகசூல் இழப்புகளை குறைத்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்... எந்த நேரத்தில் டீ குடிக்கவே கூடாது தெரியுமா?

Tea | டீ குடிக்க சரியான நேரம் இதுதான்!

  • வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கக் கூடாது.

  • இது உடலில் வீக்கம், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை தரும்.

  • உணவுக்கு முன் அல்லது பின் தேநீர் குடிக்க வேண்டாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article