Last Updated:Feb 16, 2026 6:28 PM IST
கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவர்களிடையே அங்காளம்மன் ஆலய திருவிழா காரணமாக ஏற்பட்ட மோதல், ஊரில் பதற்றம் ஏற்படுத்தியது; போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே இரு மீனவ கிராமத்தினர் இடையே, கோவில் திருவிழா சம்பந்தமாக ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்து ஊரையே கதிகலங்க விட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்களால் தாக்கி ஆக்ரோஷத்தில் ஈடுபட்டு கொண்ட சம்பவத்தின் பின்னணி என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவர்களிடையே, பொது இடம் சம்பந்தமாகக் கடந்த 2 ஆண்டுகளாக கடும் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் திங்கள் கிழமை புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில், மயானக் கொள்ளை திருவிழா நடைபெற இருந்தது. அதனை முன்னிட்டு ஞாயிறு அன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது புதுப்பட்டினம் மீனவர்களை, தங்கள் எல்லையில் யாரும் பால்குடம் எடுத்துச் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தி உய்யாலி குப்பம் மீனவர்கள் பிரச்சினை செய்துள்ளனர்.
அதனால் காலைமுதலே பால்குடம் எடுக்காமல் காத்திருந்தனர். இதனால் புதுப்பட்டினம் மீனவர் பகுதி மக்கள் போலீசில் புகார் அளிக்க, அதிகாரிகள் உய்யாலி குப்பம் மீனவரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் பொறுமை இழந்து எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்ததால் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
இதையும் படிங்க: டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணித்த மதுபோதை இளைஞரை தாக்கிய ரயில்வே போலீஸ்.. வைரல் வீடியோ!
அதில் ஊரே கலவர காடாக மாற, ஆக்ரோஷ மோதலில் ஈடுபட்ட பலரும் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறுமா? என்ற பதற்றமான சூழலில் ஞாயிறு இரவு திட்டமிட்ட அனைத்து கோயில் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் பாதுகாப்பிற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு மீனவ கிராமங்களை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்தனர். கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
.png)





English (US) ·