சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. கதறிய வெஸ்ட் இண்டீஸ்.. கெத்தாக செமி பைனல் சென்ற இந்தியா!

3 hours ago 18

டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றுள்ளது. சேட்டன் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். 

2 Min read

| Updated : Mar 01 2026, 11:19 PM IST

14

சஞ்சு சாம்சன் அதிரடி; இந்தியா வெற்றி

Image Credit : X@BCCI

சஞ்சு சாம்சன் அதிரடி; இந்தியா வெற்றி

டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. 

பின்பு விளையாடிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அட்டகாசமாக பொறுப்புடன் அதிரடியாக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 97 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

24

தனியொருவனாக விளையாடிய சஞ்சு சாம்சன்

Image Credit : Getty

தனியொருவனாக விளையாடிய சஞ்சு சாம்சன்

சவாலான இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷனும் (10) விரைவில் வெளியேறினார். 

பின்னர் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் (18 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் தனது டிரேட் மார்க் ஷாட்கள் மூலம் பவுண்டரியும், சிக்சர்களுமாக நொறுக்கினார். அரை சதத்தை கடந்தும் அதிரடியில் கலக்கினார்.

34

சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன்

Image Credit : Getty

சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன்

இவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்த திலக் வர்மா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 12 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 17 ரன்கள் எடுத்திருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு கவலையை ஏற்படுத்தியது. சிவம் துபே மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தனர். கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சஞ்சு சாம்சன் சிக்ஸர் அடித்தார். இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இதன் மூலம் இந்தியா 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.

44

அரையிறுதியில் இந்தியா

Image Credit : Getty

அரையிறுதியில் இந்தியா

97 ரன்கள் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டி மார்ச் 5 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article