புடவையில் எடுப்பாக தெரிய தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். அதற்காக எப்போதும் புது புடவையாக வாங்கிக் கொண்டிருக்க அவசியமில்லை. ஏற்கனவே இருக்கும் பழைய புடவையிலும் கூட ராயல் லுக்கில் வலம் வர முடியும். அதற்கு எடுப்பான ப்ரவுஸ் அணிந்தாலே போதும்.
16

Image Credit : Pinterest
ஹை-நெக் வித் எல்போ லென்த்
நீங்கள் அணிவது காட்டன் புடவையோ அல்லது சில்க் புடவையோ, மூடிய கழுத்து (High Neck) மற்றும் முழங்கை வரை இருக்கும் கை வைத்தால் உடனடியாக ஒரு 'மினிஸ்டர்' அல்லது 'ராயல்' லுக் கிடைக்கும். இதற்கு கழுத்தில் நகை தேவையில்லை, பெரிய கம்மல் அணிந்தாலே போதும்.
Add Asianetnews Tamil as a Preferred Source
26
Image Credit : Pinterest
கான்ட்ராஸ்ட் மேஜிக்
புடவையின் நிறத்திலேயே பிளவுஸ் தைக்காமல், முற்றிலும் மாறுபட்ட கான்ட்ராஸ்ட் (Contrast) நிறத்தைத் தேர்ந்தெடுங்கள். உதாரணமாக, மெரூன் புடவைக்கு எமரால்டு கிரீன் (Emerald Green) அல்லது கருப்பு நிற பிளவுஸ் அணிவது உங்களை கூட்டத்தில் தனித்து காட்டும்.
36
Image Credit : Pinterest
மினிமலிஸ்ட் ஆரி ஒர்க்
பிளவுஸ் முழுக்க வேலைப்பாடுகள் செய்யாமல், கையின் ஓரங்களிலும் கழுத்திலும் மட்டும் மெல்லிய கோல்டன் அல்லது ஆன்டிக் (Antique) ஒர்க் செய்வது ஒரு கிளாசிக் தோற்றத்தைத் தரும். அதிக ஜிகினா வேலைப்பாடுகளைத் தவிர்ப்பதே ராயல் லுக் தரும்.
46
Image Credit : Pinterest
விண்டேஜ் காலர் பிளவுஸ்
ஷர்ட் காலர் அல்லது ஸ்டாண்ட் காலர் பிளவுஸ்கள் இப்போது மிகவும் ட்ரெண்டிங். இது உங்களுக்கு ஒரு 'கார்ப்பரேட் ராயல்டி' (Corporate Royalty) தோற்றத்தைத் தரும். சாதாரண பார்டர் இல்லாத புடவைக்கு இது மிகச்சிறந்த தேர்வு.
56
Image Credit : Pinterest
ஃபேப்ரிக் மிக்ஸ்-மேட்ச்
உங்களிடம் பட்டுப் புடவை இருந்தால், அதற்கு பட்டு பிளவுஸே தைக்காமல், ரா சில்க் (Raw Silk) அல்லது வெல்வெட் (Velvet) துணியில் பிளவுஸ் தைத்துப் பாருங்கள். அந்த மெட்டீரியல் மாற்றமே உங்களை மிகவும் காஸ்ட்லியாகக் காட்டும்.
66
Image Credit : Pinterest
பேக் டிசைன் ரகசியம்
முன்பக்கம் எளிமையாக இருந்தாலும், பின்பக்கம் ஆழமான 'V' அல்லது சதுர வடிவம் வைத்து, ஒரு பெரிய லட்கன் (Latkan) அல்லது பார்டர் கொடுத்தால், அது ஒரு அழகான மேஜிக்கை உருவாக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
.png)
1 hour ago
11







English (US) ·