சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த பாலர் பள்ளி 50 விழுக்காடு வரை கட்டணக் குறைப்பு

1 hour ago 13

a98105d5-0755-49a8-b372-94a9c6ef9f4a

லெங்கொக் பாருவில் உள்ள கின்டல் கார்டன் பாலர் பள்ளி குறைபாடுள்ள பிள்ளைகளுக்கும் சேவை வழங்குகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் விலைவாசி அதிகரித்துவரும் நிலையிலும் லெங்கோக் பாருவில் உள்ள பாலர் பள்ளி ஒன்று மாணவர்களுக்கான கட்டணத்தை 50 விழுக்காடுவரை குறைத்துள்ளது.

லெங்கொக் பாருவில் 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் கின்டல் கார்டன் பாலர் பள்ளி, மானியங்களுக்குமுன் மாதந்தோறும் $1,800 வரை கட்டணம் வசூலித்தது. இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து பாலர் பள்ளி வசூலிக்கும் அதிகபட்சக் கட்டணம் $900.

சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த பாலர் பள்ளியான கின்டல் கார்டன், சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளையும் ஒருசேர பராமரிக்கிறது. ‘ஆட்டிசம்’ எனும் தொடர்புத்திறன் குறைபாடு, பெருமூளை வாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கும் கின்டல் கார்டன் சேவை வழங்குகிறது.

கின்டல் கார்டன் பாலர் பள்ளியைச் சமூக அமைப்பான ‘அவ்வா’ எனும் ஆசியப் பெண்கள் நல அமைப்பு நடத்துகிறது. அதன் தலைமை நிர்வாகி ஜே.ஆர். கார்த்திகேயன், கின்டல் கார்டனில் பிள்ளைகளின் எண்ணிக்கை 70லிருந்து 50க்குக் குறைந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

கின்டல் கார்டன் பாலர் பள்ளி, 2024/2025 நிதியாண்டில் நட்டத்தில் செயல்பட்டதாக ‘அவ்வா’ அமைப்பின் வருடாந்திர அறிக்கை குறிப்பிட்டது. ஆனால், அது ஒரு பொருட்டல்ல என்றார் திரு கார்த்திகேயன்.

கின்டல் கார்டன் பாலர் பள்ளியில் 70 விழுக்காட்டினர் குறைபாடு இல்லாத பிள்ளைகள், 30 விழுக்காட்டினர் குறைபாடுள்ள பிள்ளைகள்.

பாலர் பள்ளியில் புதிய மாணவர்களுக்கான இடங்கள் நிரம்பிவிட்டதால் பள்ளியில் உள்ள குறைபாடுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை இயல்பாகக் குறைந்துவிடும் என்று திரு கார்த்திகேயன் விளக்கம் அளித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் 100க்கும் அதிகமான குறைபாடுள்ள பிள்ளைகளின் பெற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் வருவதையும் திரு கார்த்திகேயன் கூறினார்.

“இது ஒரு பொதுச் சேவை. வணிகம் அல்ல,” என்று 47 வயது திரு கார்த்திகேயன் குறிப்பிட்டார்.

கின்டல் கார்டன் பாலர் பள்ளி ஒரு பொதுச் சேவை. வணிகம் அல்ல என்றார் ஆசியப் பெண்கள் நல அமைப்பின் தலைமை நிர்வாகி திரு கார்த்திகேயன்.

கின்டல் கார்டன் பாலர் பள்ளி ஒரு பொதுச் சேவை. வணிகம் அல்ல என்றார் ஆசியப் பெண்கள் நல அமைப்பின் தலைமை நிர்வாகி திரு கார்த்திகேயன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலர் பள்ளியில் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவதற்கு அது அமைந்துள்ள இடமும் ஒரு காரணம் என்றார் திரு கார்த்திகேயன்.

கின்டல் கார்டன் ரெட்ஹில் பேட்டையில் அமைந்துள்ளது. அங்குள்ள மூப்படையும் சமூகத்திற்கு இடையே பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவு என்றார் அவர்.

கின்டல் கார்டனில் பிள்ளைகளைச் சேர்க்கும் குடும்பங்கள் மானியத்துடன் மாதந்தோறும் $700லிருந்து $1,200வரை கட்டணம் செலுத்துகின்றன.

Read Entire Article