சூரிய மின் உற்பத்தி: இந்தியாவைப் பாராட்டும் ஐநா

1 hour ago 6

a2c7776b-737e-44b3-ae84-8091efba3018

சைமன் ஸ்டீல். - பம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: சூரிய மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது என ஐநா பருவநிலை மாற்றத் திட்டத்திற்கான நிர்வாகச் செயலாளர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியப் பொருளியலுக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

திறமையான ஊழியர்களின் பங்களிப்புடன் பசுமை, எரிசக்தி உற்பத்தியில் இந்தியா சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் புதைபடிவ எரிபொருளில் இருந்து புதுப்பிக்கதக்க ஆற்றலுக்கு இந்தியா விரைவாக மாற இதுவே முக்கியமான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் சூரிய மின்சக்தித் திறன் 50 மடங்கு அதிகரித்துள்ளதாக திரு ஸ்டீல் சுட்டினார்.

பசுமை எரிசக்தி உற்பத்தி தொடர்பாக இந்தியா நிர்ணயித்த இலக்குகளை அந்நாடு ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே கடந்துள்ளது என்றும் அவர் பாராட்டினார்.

சூரிய மின்சக்தி, மற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் சார்ந்திருந்ததன்மூலம், கடந்தாண்டில் 18 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்தியா தனது புதைபடிவ எரிபொருள் கொள்முதலை மிச்சப்படுத்தியதாக திரு சைமன் ஸ்டீல் மேலும் தெரிவித்தார்.

Read Entire Article