Last Updated:Jul 23, 2026 6:19 PM IST
சென்னை மெரினா கடற்கரையிலும் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் ஆங்காங்கே மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடைபெறும் என போலீசார் சந்தேகத்தினர். அதன்படி மெரினாவிலும் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
அதனால் சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலை முழுவதும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்க படாததால் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
.png)






English (US) ·