சென்னையின் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள்?

6 hours ago 2

Last Updated:October 13, 2025 8:47 PM IST

Chennai Power Cut: சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை
மின்தடை

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை - 14.10.2025) மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை - 14.10.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

ஆவடி: கோவில் பதாகை, பூங்கா தெரு, அசோக் நகர், பைபிள் கல்லூரி, கிறிஸ்ட் காலனி, நாகம்மை நகர், எட்டியம்மன் நகர், கிருபா நகர். தென்றல் நகர் பாலாஜி நகர், சிடி சாலை, ஆவடி, டிவி ஷோ ரூம். பி வெல் மருத்துவமனை.

திருமுல்லைவாயல்: மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம்.” ஆகிய இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.

First Published :

October 13, 2025 8:47 PM IST

Read Entire Article