சென்னையில் பெய்த கனமழை: விமானச் சேவைகள் பாதிப்பு

5 hours ago 12

4c096369-4a45-4380-8bba-367ff47f3838

கடந்த இரு வாரங்களாகக் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்துள்ளது. - படங்கள்: இந்து தமிழ் திசை

சென்னை: சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்ததால் சனிக்கிழமை (மே 9) விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த இரு வாரங்களாகச் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கடும் வெயில் வாட்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

சனிக்கிழமை பிற்பகல் சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

சனிக்கிழமை (மே 9) பிற்பகல் சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. 

சனிக்கிழமை (மே 9) பிற்பகல் சாலையோரங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.  - படம்: இந்து தமிழ் திசை

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், எண்ணூர், சோழிங்க நல்லூரில் தலா 2 செ.மீ, தண்டையார்பேட்டை, எம்ஜிஆர் நகர், பெரம்பூர், சைதாப்பேட்டை, சென்னை ஆட்சியர் அலுவலகம், வில்லிவாக்கம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ அளவு மழை பெய்ததாகப் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, மோசமான வானிலை நிலவியதால் சனிக்கிழமை, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்ததாக இந்து தமிழ் திசை தகவல் வெளியிட்டுள்ளது.

பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களிலிருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உட்பட 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால், பெங்களூருக்கு அந்த விமானங்களைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சிறிது நேரத்தில் வானிலை சீரானதும் அந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.

அதேநேரம், சென்னையில் இருந்து அகமதாபாத், டெல்லி, கண்ணூர், தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட 10 இடங்களுக்குச் செல்லவிருந்த விமானச் சேவைகள் பலத்த மழையால் தாமதமாகப் புறப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 15க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article