காலை கிட்டத்தட்ட 11.50 மணிக்கு சவுத் பிரிட்ஜ் ரோட்டில், காருக்கும் அந்த இரண்டு பாதசாரிகளுக்கும் இடையே விபத்து நேர்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். - படம்: எஸ்ஜி ரோடு/விஜிலாண்டே ஃபேஸ்புக்
Chinatown car accident: Six-year-old girl dies.
On February 6th, a six-year-old Indonesian girl died after being hit by a car with her 31-year-old mother in Singapore's Chinatown. The accident occurred around 11:50 a.m. on South Bridge Road, near the Buddha Tooth Relic Temple. Both mother and daughter, who were tourists, were taken to Singapore General Hospital, where the girl later died. A 38-year-old female driver is assisting police with the ongoing investigation. The incident, reportedly occurring as the driver exited a parking lot, was documented in photos on the SG Road Vigilante Facebook page.
Generated by AI
பிப்ரவரி 6ல் சைனாடவுன் வட்டாரத்தில் ஒரு பெண்ணையும் அவரது ஆறு வயது மகளையும் கார் ஒன்று மோதியதில் அந்த ஆறு வயதுச் சிறுமி உயிரிழந்தார்.
காலை கிட்டத்தட்ட 11.50 மணிக்கு சவுத் பிரிட்ஜ் ரோட்டில் காருக்கும் அந்த இரண்டு பாதசாரிகளுக்கும் இடையில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான இருவரும் சுயநினைவுடன் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுமி பின்னர் உயிரிழந்தார்.
இந்தோனீசியாவைச் சேர்ந்த 31 வயது தாயாரும் மகளும் சுற்றுப்பயணிகள் எனச் சீன மொழிப் பத்திரிகையான ‘சாவ்பாவ்’ (Zaobao) குறிப்பிட்டது. ‘புத்தா டூத் ரிலிக்’ (Buddha Tooth Relic Temple) எனும் பெளத்த ஆலயத்திற்குப் பக்கத்திலுள்ள கார் நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது.
விபத்தைக் காட்டும் புகைப்படங்கள் ‘எஸ்ஜி ரோட் விஜிலாண்டே’ (SG Road Vigilante) ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. ஓட்டுநர், வாகன நிறுத்துமிடத்திலிருந்து வளைந்து வெளியேறும் நேரத்தில் விபத்து நடந்ததாக அந்தப் பதிவின் தலைப்பு குறிப்பிட்டது.
சாலையோரத்தில் சிறுமியை ஆடவர் ஒருவர் தாங்கிப் பிடித்திருந்ததைப் புகைப்படம் ஒன்று காட்டியது.
விசாரணைக்கு 38 வயதுப் பெண் ஓட்டுநர் உதவுவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணை தொடர்கிறது.
.png)







English (US) ·