புதுடெல்லி: மே 13-
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினருமான சோனியா காந்தி (79), உடல்நலக் குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் திட்டமிடப்பட்ட ஒரு சிறு அறுவை சிகிச்சை‌ இன்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக உள்ளார். தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இன்னும் 2 முதல் 3 நாட்களுக்குப் பிறகு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும், அதன் பின்னர் சில நாட்களில் இல்லம் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாகவே சுவாசப் பாதை தொற்று மற்றும் வயது முதிர்வு தொடர்பான உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்
மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2022 ஜூன் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட மூக்கில் இரத்தப்போக்கு காரணமாகச் சிகிச்சை பெற்றார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாடுகளுக்குச் சென்று அவ்வப்போது தனது உடல்நிலை குறித்த முழுமையான பரிசோதனைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அவர் விரைவில் பூரண நலம்பெற தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.