Last Updated:Jul 23, 2026 6:32 PM IST
“நிகழ்ச்சி இருந்ததால் ஜனநாயகன் படத்தை முழுமையாக பார்க்கவில்லை, பாதியிலேயே வந்துவிட்டேன்” என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

“நிகழ்ச்சி இருந்ததால் ஜனநாயகன் படத்தை முழுமையாக பார்க்கவில்லை, பாதியிலேயே வந்துவிட்டேன்” என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை, போரூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் சாலையோர உணவு விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்துகொண்டு 5 பேருக்கு இலவச உணவு வண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சாலையோர உணவு வியாபாரிகளின் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்குச் சீரான அடையாளத்தை பிராண்டாக உருவாக்கவும் முதற்கட்டமாக 6 மாவட்டங்களில் உணவு வீதி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வியாபாரிகளுக்கு மின்சார இணைப்பு மற்றும் உரிமம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். லாப நோக்கில் உணவில் தடை செய்யப்பட்ட ரசாயன கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
இன்று ஜனநாயகன் படம் வெளியான நிலையில் படம் எப்படி இருக்கு என்ற கேள்விக்கு, “ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு ஏற்கனவே வருவதாக தெரிவித்ததால் படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. பாதியிலேயே வந்து விட்டேன்” என அமைச்சர் பதில் அளித்தார். அதே போல் மாட்டு கறி ஸ்டால் வைக்க கூடாது என யார் சொன்னாலும் ஏதாவது அமைப்பாக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்"எனத் தெரிவித்தார்.
.png)






English (US) ·