வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற டாடா பஞ்ச் EV மாடல் காரை இப்போது ரூ.6.49 லட்சத்துக்கு வாங்கிக் கொள்ள முடியும். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
2 Min read
| Updated : Feb 22 2026, 02:50 PM IST
14

Image Credit : TATA MOTORS
மின்சார கார்களுக்கு வரவேற்பு அதிகரிப்பு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்துக்கு சென்று வரும் நிலையில். அனைவரும் இப்போது மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. இந்தியாவில் மின்சார கார்களுக்கு இருக்கும் மவுசை கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்களும் போட்டிபோட்டு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கி வருகின்றன.
24
Image Credit : Google
டாட்டா பஞ்ச் EV விலை ரூ.6 லட்சத்துக்கு வாங்கலாம்
அந்த வகையில் டாட்டா பஞ்ச் EV (Punch EV)எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. இந்த காரின் Smart (Base) தொடக்க வேரியண்ட்டின் விலை ரூ.9.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. ஆனால் இந்த காரை BaaS (Battery-as-a-Service) என்ற திட்டத்தின் மூலம் ரூ.6 லட்சத்துக்கு வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? மத்திய அரசின் நேரடி திட்டமான இதை பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.
34
Image Credit : Tata Motors website
BaaS திட்டம் தெரியுமா?
எலெக்ட்ரிக் கார்ககள் இயங்க பங்கு வகிப்பது அதன் பேட்டரிகள் தான். மின்சார கார்களின் மொத்த நிலையில் பேட்டரிகள் மட்டுமே சுமார் 50% விலை இருக்கும். இதனால் BaaS திட்டத்தில், நீங்கள் மின்சார கார்களை வாங்கினால் பேட்டரிக்கான விலையைச் செலுத்த வேண்டியதில்லை.
காரின் பாடிக்கு (Chassis) மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. இதனால் காரின் தொடக்க விலை குறைகிறது. இந்த திட்டத்தின் மூலம் டாடா பஞ்ச் EV விலையை ரூ.9.69 லட்சத்தில் இருந்து ரூ.6.49 லட்சத்துக்கு உங்களால் வாங்கிக் கொள்ள முடியும்.
எம்.ஜி, மாருதி கார்களின் விலையும் குறைப்பு
டாடா மட்டுமின்றி எம்.ஜி, மாருதி நிறுவனங்களும் BaaS திடட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. ரூ.13.50 லட்சம் விலை கொண்ட MG வின்ட்சர் (Windsor EV) மாடல் காரை ரூ.9.99 லட்சத்துக்கு வாங்கிக் கொள்ள முடியும். மேலும் ரூ.7 லட்சம் விலை கொண்ட MG காமட் (Comet EV)காரை ரூ.4.90 லட்சத்துக்கு வாங்கிக் கொள்ள முடியும்.
44
Image Credit : Google
பேட்டரி வாடகை கட்டணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
இந்த BaaS திட்டத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் காரை குறைவாகவே பயன்படுத்துபவர் என்றால் இது மிகவும் சிறந்ததாகும். BaaS திட்டத்தில் காரின் தொடக்க விலை குறைந்தாலும் நீங்கள் வாடகைக்கு எடுத்த பேட்டரிக்கு மாதம் தோறும் அல்லது ஓட்டும் கிலோமீட்டருக்கு ஏற்ப ஒரு தொகையைச் செலுத்த வேண்டும். இப்போது பேட்டரி வாடகைக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.2.50 முதல் ரூ.4.50 வரை நிறுவனங்கள் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
.png)
2 hours ago
16





English (US) ·