அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி
Trump Tariffs Raised to 15%
Washington: The Supreme Court had ruled most of President Donald Trump's tariffs on global nations illegal. Subsequently, Trump imposed a 10% tax, then raised it to 15%. On Saturday, February 21, he announced plans for a further tax increase.
Generated by AI
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரிகள் பெரும்பாலும் சட்டத்துக்குப் புறம்பானவை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதனையடுத்து அவர் உலக நாடுகள் மீது புதிதாக 10 விழுக்காடு வரி விதித்தார். இப்போது அந்த வரி விகிதத்தை அவர் 15 விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளார்.
வரியை மேலும் உயர்த்தப்போவதாக திரு டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 21) ட்ரூத் சோஷியல் சமுக ஊடகத் தளத்தில் அறிவித்தார்.
உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) தமது வரித் திட்டத்துக்கு எதிராக விதித்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு எதிரானது என்று அவர் சாடினார். உச்ச நிதிமன்றத்தின் முடிவை முழுமையாக ஆராய்ந்த பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
1977 பொருளியல் அவசரநிலை அதிகாரச் சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்து சிறிது நேரத்தில் திரு டிரம்ப் உலக நாடுகள் மீது புதிதாக 10 விழுக்காடு வரி விதித்தார். நீதிபதிகளிடையே அறுவர் வரிவிதிப்புக்கு எதிராகவும் மூவர் அதற்குச் சாதகமாகவும் தீர்ப்பளித்திருந்தனர்.
.png)






English (US) ·