சென்னை, மே. 9- த.வெ.க. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்பதால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு கோரி த.வெ.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான ஆட்சி நிறுவப்படுவதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு விடுத்துள்ள வேண்டுகோளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு மனதோடு வரவேற்கிறது.
சட்ட மன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய 2 உறுப்பினர்களும் ஆளுநர் மேற்கொள்ளக் கூடிய அரசு அமைப்புக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும் துணை நிற்பர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக்கூறப்பட்டது. இதனால், த.வெ.க.வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததாக தகவல் பரவியது. இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியிட்டுள்ள பதிவில், ‘த.வெ.க.வுக்கு ஆதரவு இல்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.
.png)
58 minutes ago
10





English (US) ·